வெளிநாட்டு முதலீடுகள் இல்லாமல் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது

 



வெளிநாட்டு முதலீடுகள் இல்லாமல் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு அடுத்த சில மாதங்களில் அரசாங்கத்தின் பொறிமுறையை முழுமையாக  மாற்றியமைக்க வேண்டும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

ZOOM தொழில்நுட்பத்தின் ஊடாக “ஆளுமையில் இளைஞர்கள்” என்ற மாநாட்டில் நேற்று (ஒக்.22) கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“இன்று நமது பல தொழில்கள் வங்குரோத்து அடைந்துள்ளன. முதலில் நமது வங்கி கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும். அரசு வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளை மறுசீரமைக்க வேண்டும். அதன் மூலம் பல தொழில்களை வாங்குரோத்து நிலையில் இருந்து மீட்க முடியும். பொருளாதார உற்பத்தியை நாம் முன்னெடுத்துச் செல்ல முடியும்.” என ஜனாதிபதி கூறினார்