கிழக்கில் விவசாய நவீனமயமாக்கலை அமைச்சர் குழு பார்வையிடல் !

விவசாய அமைச்சின் கீழ் இயங்கும் விவசாய நவீன மயமாக்கல் திட்டமானது கிழக்கு மாகாணம் உட்ப்பட7 மாகாணங்களில் உலக வங்கியின் நிதி உதவியுடன் 2018 முதல் நடைமுறையில் உள்ளது.

கிழக்குமாகாணத்தில் அம்பாறை , மட்டக்களப்பு மாவட்டங்களில் நேரடி பயனாளிகளாக 2800 விவசாயிகளுடன் 2300 ஏக்கரில்அந்நிய செலாவணியை ஈட்டும் வகையிலும் மீதப்படுத்தும் வகையிலும் ஏற்றுமதிக்காகவும் இறக்குமதியை குறைக்கும் வகையிலும் ,இன்றுவரை 7வகையான பயிர்களை அதி நவீன தொழில் நுட்பங்களுடன் மேற்க்கொண்டு வருகின்றது.

அந்தவகையில் ,இன்றுவரை மட்டக்களப்பில்; 400 மில்லியன் செலவில் கட்டுமான பணிகளாக 45 கிலோமீற்றர் பாதை, 11 1/2 கிலோமீற்றர நீர் வடிகால் தொகுதி, 13 கிலோமீற்றர யானை வேலி, 11 விவசாயக்கிணறுகள், 2 நிலக்கடலை பதனிடும் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 1100 மில்லியன் செலவில் விவசாய நடவடிக்கைகளாக, 500 ஏக்கரில் 500 பயனாளிகளுடன் பச்சைகெக்கரி செய்கையும் அதன் உற்பத்தி மூலம் ,இன்றுவரை பெறுமதி சேர்க்கப்பட்ட பின்னர் ஏற்றுமதி மூலம் 34.8 மில்லியன் ருளு டொலரை பெறப்பட்டுள்ளடன், 200 ஏக்கரில் 200 விவசாயிகளுடன் நிலக்கடலையும் 100 ஏக்கரில் 200 விவசாயிகளுடன் மிளகாய் உற்பத்தியும் 500 பயனாளிகளுடன் 250 ஏக்கரில் ஏற்றுமதிக்காக கவன்டிஸ் இன வாழையும், 150 ஏக்கரில் 300 பயனாளிகளுடன் றெட்ஏஞ்சல் ,இந்திய இன மாதுளை உற்பத்தி நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவசாய நவீன மயமாக்கலின் போது வெறுமன விவசாய ,இயந்திர மயமாதல் மட்டுமல்லாது நவீன விவசாய தொழில் நுட்பங்களை சர்வதேச வல்லுநர்களின் சேவை மூலமும் பயிற்ச்சி பட்டறைகளை நடாத்தவும் விவசாய கம்பனிகளை உருவாக்கி ஏற்றுமதி நோக்கில் உற்பத்திகளை மேற்கொள்ள திட்டமிடலுக்கான பயிற்சிகளை வழங்கவும் 23 மில்லியன் செலவிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் விசாய நவீன மயமாக்கல் திட்டத்தின் பணிப்பாளர் கலாநிதி றொகான் விஜகோன் அவர்களின் வழிகாட்டலுக்கு அமைவாக, கிழக்குமாகாண பிரதித்திட்டப் பணிப்பா ஆர். ஞானச்செல்வம் அவர்களின் ஏற்ப்பாட்டில் கௌரவ விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர கௌரவ ,இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் அவர்கள் கிழக்குமாகாண ஆளுனர், கிழக்குமாகாண பிரதம செயலாளர், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் உட்பட பல அரச உயர் அதிகாரிகளின் கள நடவடிக்கைகளின் மேற்ப்பார்வை விஜயத்தின்போது தோட்டங்களை பார்வையிட்டதோடு விவசாயிகளுடன் கலந்துரையாடல்களையும் மேற்க்கொண்டிருந்தனர்.

விவசாய அமைச்சர் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் விவசாய நவீன மயமாக்கல் திட்டமானது ,இலங்கையின் பல மாகாணங்களில் ,இருந்து தமது வழிகாட்டலின் கீழ் ஏற்றுமதி நடவடிக்கைகளை மேற்க்கொண்டு வருவதாகவும் கிழக்குமாகாணத்தில் கெக்கரிச்செய்கை உற்பத்தியின் ஏற்றுமதி மூலம் முழு திட்டத்திற்க்குமாக செலவிடப்பட்ட தொகையை விட அதிகமாக அந்நிய செலாவணியை பெற்றுத்தந்துள்ளதாகவும் ,இதேபோன்று வடமத்தியமாகாணத்தில் ,ருந்து நொவெம்பர் மாதம் 26ம்திகதி முதல் டுபாய் நாட்டிற்க்கு வாராந்தம் ஒவ்வொரு கொள்கலன்; வாழைப்பழம் ஏற்றுமதி செய்ய ,இருப்பதாகவும், கிழக்கு மாகாணத்தில் கட்டம் கட்டமாக மேற்க்கொள்ளும் இந்த மாதுளைச் செய்கை இலங்கையின் மாதுளம்பழத் தேவையின் 50 %  பூர்த்திசெய்யும் என நம்புவதாக தெரிவித்ததோடு நின்றுவிடாது,

இவ்வாறு நவீன தொழில்நுட்பங்களுடன் மேற்க்கொள்ளும் திட்டங்கள் இளைஞர்கள் மத்தியில் கவனத்தையீர்ப்பதனால் தொழிலுக்காக வெளிநாடு செல்லவோ அரசாங்கத்தை நம்பி  இருப்பதைவிட சிறந்த வருமானமுள்ள தொழில் முயற்ச்சி என தாமும் நம்புவதாக தெரிவித்தார். ,இதன்போது திட்டத்தின் பயனாளிகளை கொண்ட 4 சங்கங்களுக்கு 4 சக்கர உழவுசக்கர இயந்திரம் அதற்க்கான பெட்டிகள், கலப்பைகள் வழங்கிவைக்கப்பட்டது.