எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்குவதற்குத் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் : சஜித் பிரேமதாஸ !


தற்போது பாடசாலைகளில் குழந்தைகள் மயங்கி விழும் நிலை உருவாகியுள்ளதாகவும், இந்நிலைமையை உடனடியாகக் கருத்திற்கொண்டு எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்குவதற்குத் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும், இதற்கு மேலதிகமாக, உடனடியாக பிள்ளைகளுக்கான போசாக்குத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி அவர்களின் போசாக்கு நிலையை பரிசோதிக்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று (11) பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.

அதுமட்டுமின்றி மஹபொல புலமைப்பரிசில் வழங்குவதிலும் தாமத நிலை நிலவி வருவதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் அதனை உடனடியாக வழங்குமாறும் தெரிவித்தார்.