பெரியகல்லாறு பொது நூலகம், வாசகர் வட்டத்துடன் இணைந்து நடாத்திய தேசிய வாசிப்பு மாத சிறப்பு நிகழ்வு

 


ரவிப்ரியா 

பெரியகல்லாறு பொது நூலகம் தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு கடந்த மாதம் தொடர்ச்சியாக பல்வேறு நிகழ்ச்சிகளை மாணவர்களை மையப்படுத்திநடாத்தி அதனோடு இணைந்ததாக அதற்கான பரிசளிப்புடன் கூடிய இறுதி சிறப்பு நிகழ்வை கலை அம்சத்துடன்  பொது நூலக மண்டபத்தில் வாசகர் வட்ட தலைவர் கே.சுதரஷன் தலைமையில் புதனன்று(09) நடாத்தியது.. 

பிரதம அதிதிகளாக மண்முனை தென் எருவில் பிரதேச சபை தவிசாளர் ஜி.யோகநாதன் மற்றும் மட்டக்களப்பு உள்ளுராட்சி உதவி ஆணையாளர் எஸ்.பிரஹாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். 

மற்றும் சிறப்பு அதிதிகளாக  --ஸ்ரீ சர்வார்த்த சித்திவிநாயகர் ஆலய வண்ணக்கர் என்.கமல்ராஜ் பிரதேச சபை உறுப்பினர்களான எஸ்.கணேசநாதன் மற்றும் வினோராஜ் பிரதேச சபை செயலாளர் எஸ்.அறிவழகன் மட்டக்களப்பு சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.குகநேசன். ஆகியோருடன் கௌரவ அதிதிகளாக ஸ்ரீசிவசுப்பிரமணியர் ஆலய தலைவர் எம்.ஜெயநிதி ஆகியோர் கலந்து கொண்டனர். 

இந்நிகழ்வில் கலை நிகழ்வுகள் வாசிப்பு மாதத்தை முன்னிட்டு பாடசாலை மாணவர்களிடையே நடாத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான  பரிசளிப்புடன் விசேடமாக சிறந்த வாசகர்கள் கௌரவிப்புஇ  சிறந்த குறும்பட இயக்குனர் கௌரவிப்பு  என்பனவும் இடம்பெற்றன. 

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட மட் உள்ளுராட்சி உதவி ஆணையாளர் எஸ்.பிரஹாஷ் தமதுரையில் இந்த மாவட்டத்தில் அதுவும் தென் எருவில் பிரதேச செயலக பிரிவில் வாசகர் வட்டம் சிறப்பாக இயங்குவதற்கு இந்த விழாவே சாட்சியாக இருக்கின்றது. ஏனெனில் வாசகர்கள் இருப்பதால்தான் வாசகர் வட்டம் உருவாகின்றது. இது மகிழ்ச்சி தரும் விடயம். அதுவும் கல்லாறு வாசகர் வட்டம் முதன்மை பெறுகின்றது என்று குறிப்பிட்டார். 

அறிவார்ந்த சமூகத்திற்கான வாசிப்பு என்ற தொனிப் பொருளை மையப்படுத்தி இவ்விழா ஒழுங்குபடுத்தியமை சிறப்பம்சமாகும். இங்கு நடைபெற்ற நடன நிகழ்வுகள் கூட ஒருமித்த சலங்கை ஒலி மூலம் கலை நுணுக்கங்களை வெளிப்படுத்தியதுஇ மாணவர்களின் ஒன்றித்த கலைத் திறமையும் மிக நேர்த்தியாக வெளிப்பட்டது என்று குறிப்பிட்டதுடன்இ மாணவர்கள் வாசிப்பில் ஆங்கில புத்தகங்களையும் உள் வாங்குவதன் மூலம் வாழ்வில் உயர் நிலையை அடையமுடியும் என்றும் குறிப்பிட்டார். 

பிரதம அதிதிகளில் ஒருவராகக் கலந்து கொண்ட மண்முனை தென் எருவில் பிரதேச சபை தவிசாளர் ஜி.யோகநாதன் உரையாற்றுகையில் என்று பிரதம அதிதிகளில் ஒருவராகக் கலந்துகொண்ட மண்முனை தென் எருவில் பிரதேச சபை தவிசாளர் ஜி.யோகநாதன் உரையாற்றுகையில் 

போர்இ சுனாமிஇ கொரோனா போன்ற அனர்த்தங்களால் செயலிழந்திருந்த வடக்கு கிழக்கு இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக எழுந்து வரும் நிலையில் தற்போதைய பொருளாதார சிக்கல் நிலையிலும் கல்விதான் எமது நம்பிக்கை. ஆனால் அதை நாசம் செய்யும் வேலையை போதை வஸ்து லாவகமாக செய்து வருகின்றது. வெள்ளம் வரும் முன் அணை கட்ட தவறியதன் விளைவுதான் இது. 

  வெள்ளம் வரும் முன் அணை கட்ட தவறியதன் விளைவுதான் இது. இதைத் தடுப்பதற்கு சிறு வயதிலிருந்தே  வாசிப்பு பழக்கத்தை பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் தூண்டிவிட வேண்டும். அதற்கு இந்த வாசிப்புமாதத்தை பயன்படுத்த வேண்டும். வாசிப்பு பழக்கம் ஒருவனை சிறந்த பிரஜையாக்கும். அதன் மூலம் அவனே நல்லது எது கெட்டது எது என்பதை சுயமாக இனம் கண்டு சுயமரியாதை உள்ளவனாகவும் மற்றவர்க்கும் வழிகாட்டக் கூடியவனாகவும் வளர்வான். எமது தேவைகளை நாமே சொந்தக்காலில் நின்று தேடிக் கொள்ள வேண்டும்.

அதற்கு கல்வியும் சுய பொருளாதார முயற்சிகளுமே கைகொடுக்கும். இங்குள்ள வாசிக சாலையில் பௌதிக வளங்கள் இன்னும் தேவையாக இருக்கின்றது. குறிப்பாக மண்டப வசதி பற்றி  நாம் கவனத்தில் எடுத்துள்ளோம். வீட்டுக்கொரு புத்தகம் வழங்கினாலே நூலகத்திற்கான புத்தகங்கள் வந்து சேர்ந்து விடும்.    

எனவே நாம் அனைவரும் ஒன்றுபட்ட ஒற்றுமையாகச் செயற்பட்டால் எல்லாமே வந்து சேரும் என்பதே உண்மை. இங்கு நிகழ்வுகள் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது பாராட்டுக்குரியது.