# .

மட்டக்களப்பில் வீடு உடைத்து நகை, பணம் கொள்ளை !


மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள ஊறணி பகுதியில் பூட்டியிருந்த வீடு ஒன்றை உடைத்து அங்கிருந்து 13 பவுண் நிறை கொண்ட தங்க ஆபரணங்கள் மற்றும் 90 ஆயிரம் ரூபா பணம் என்பவற்றை திருடிச் சென்ற சம்பவம் செவ்வாய்க்கிழமை (29) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு திருகோணமலை பிரதான வீதியிலுள்ள ஊறணியில் ஊள்ள குறித்த வீட்டை சம்பவதினமான நேற்று மாலை பூட்டிவிட்டு குடும்பசகிதமாக வெளியே சென்று புதன்கிழமை ( நவ.30) காலையில் வீட்டிற்கு திரும்பி வந்தபோது வீட்டின் கதவை உடைத்து அங்கிருந்த தாலிக் கொடி மற்றும் 13 பவுண் கொண்ட தங்க ஆபரணங்கள் பணம் திருட்டுப் போயுள்ளது.

இது தொடர்பாக பொலிஸாரிடம் முறைப்பாடு தெரிவித்ததையடுத்து, தடவியல் பிரிவு பொலிஸார் சகதிம் பொலிசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாணைகளை மேற்கொண்டுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.