பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, விடைத்தாள் மதிப்பீட்டிற்கு நிகழ்நிலை ஊடாக பரீட்சகர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் 8ஆம் திகதி வரை சமர்ப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான தகைமைகளை பூர்த்தி செய்துள்ள ஆசிரியர்கள் www.doenets.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.