போலி ஆவணங்களை தயாரித்து காணியை விற்ற நபருக்கு 24 வருட கடூழியச் சிறைத்தண்டனை!

போலி ஆவணங்களை தயாரித்து 47 1/2 இலட்சம் ரூபாவுக்கு காணி ஒன்றை விற்பனை செய்த நபருக்கு  கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா 24 வருடக் கடூழியச் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். 

பிரதிவாதிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகத் தீர்மானித்து, சிறைத் தண்டனையுடன் அபராதத்தையும் அறிவித்த நீதிபதி, அபராதத் தொகையை செலுத்தாவிடின் மேலதிகமாக 6 மாத கடூழியச் சிறைத்தண்டனையும் விதித்தார்.

குற்றச்சாட்டின் பேரில் ரஞ்சன் லியனகே என்பவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட நிலையிலேயே இந்தத் தண்டனை விதிக்கப்பட்டது.