சுமார் 40 அரச நிறுவனங்களை மூட அரசாங்கம் அதிரடி திட்டம்!

சுமார் 40 அரச நிறுவனங்களை மூடுவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

பொதுமக்களுக்கான சேவைகள் குறைந்த மட்டத்தில் காணப்படும் அரச நிறுவனங்களை மூடுவது குறித்தே கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

செலவுகளை முகாமைத்துவம் செய்தல் மற்றும் வினைத்திறனை அதிகரித்தல் ஆகிய இலக்குகளை அடைய இதனூடாக எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

சில அரச நிறுவனங்களில் தலைவர்கள் மட்டுமே காணப்படுவதாகவும், சில நிறுவனங்கள் ஒரே விதமான செயற்பாடுகளையே மேற்கொள்வதாகவும் இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

இதேவேளை, நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை மூடுவது அல்லது மறுசீரமைப்பது போன்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கைக்கு நீண்ட கடன் வசதியை வழங்க சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையின் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன இன்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.