பெரியகல்லாறு மெதடிஸ்த மிஷன் தமிழ் பெண்கள் பாடசாலையில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு.


( தர்ஷன் ) 

மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பெரியகல்லாறு மெதடிஸ்த மிஷன் தமிழ் பெண்கள் பாடசாலையில்முதலாம் தரத்திற்கு மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் பூபாலப்பிள்ளை கமலதாசன் தலைமையில் செவ்வாய்கிழமை (28) நடைபெற்றது.

இதன்போது  அதிதிகளாக பட்டிருப்பு வலயக் கல்வில் பணிப்பாளர் சிவானந்தம் சிறீதரன், அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டிருந்ததுடன், பெரியகல்லாறு சர்வாத்த சர்வாத்த ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ நடேசடுணஸ்காந்த குருக்கள், கல்லாறு மெதடிஸ்த தேவாலய சேகர முகாமைக்குரு ச.டா.வினோத், கல்லாறு புனித அருளானந்தர் தேவாலயத்தின் அருட்தந்தை ஜே.நிகஸ்ரன் பீற்றஸ், உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.