பெரியகல்லாறு ஸ்ரீ சர்வார்த்த சித்திவிநாயகர் ஆலயத்தின் வருடாந்த கொடியேற்றம்!

(ரவிப்ரியா)

மட்டக்களப்பு மாவட்டத்தின் தெற்கு எல்லைக் கிராமமான பெரியகல்லாற்றில் அமையப்பெற்ற 500ஆண்டுகள் பழமையும் தொன்மையம் வாய்ந்த ஏழு தளங்களுடன் மட்டக்களப்பு தெற்கு எல்லையின் அடையாளச் சின்னமாக நிமிர்ந்து நிற்கம் ஸ்ரீ சர்வார்த்த சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த பிரமோற்ஷப கொடியேற்ற விழா எதிர்வரும் 22 பதனன்று கொடியெற்றத்துடன் ஆரம்பமாகி 12 நாட்கள் குடி மக்களின் திருவிழாக்கள் தினமும் நடைபெறும்.

சித்திரை 3ல் சங்காபிஷேகமும். 4ம் திகதி தேரோட்டமும், 5ந் திகதி தீர்த்தோற்ஷபமும் 6ந் திகதி காலை சங்காபிஷேகமும் மாலை பூங்காவனமும் நடைபெற்று 7ந் திகதி வெள்ளி காலை  பிராயச்சித்த அபிஷேகமும் மாலை வைரவர் பூசையுடன்  பிரமோற்ஷப விழாக்கள் நிறைவடையும்.