அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் புதிய செயலாளர் நியமனம் !

அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் புதிய செயலாளர் நியமனம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் புதிய செயலாளராக கே.டி.என்.ரஞ்சித் அசோகா நியமிக்கப்பட்டார்.

எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.

1990 ஆம் ஆண்டு இலங்கை நிருவாக சேவையில் இணைந்து கொண்ட இவர் இலங்கை நிர்வாக சேவையில் உயர் அதிகாரியாவார்.

இதற்கு முன்னர், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் செயலாளராகவும் அவர் கடமையாற்றியுள்ளார்.