சந்தையில் போட்டித்தன்மையை ஏற்படுத்துவதன் மூலம் பொருட்களின் விலைகளைக் குறைக்க முடியும் : நளின் பெர்னாண்டோ!

சந்தையில் போட்டித்தன்மையை ஏற்படுத்துவதன் மூலம் பொருட்களின் விலைகளைக் குறைக்க முடியும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

உலக சந்தையில் விலை குறைவடைதல், மொத்த விற்பனை விலைகள் குறைவடைதல் – சில்லறை விற்பனை நிலையங்களில் விலை குறைவடையாமை ஆகிய காரணிகளுக்கிடையிலான முரண்பாடுகளை சந்தை போட்டித்தன்மையினூடாக மாத்திரமே நிறுத்த முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

நுகர்வோர் அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர்கள் மற்றும் நிறுத்தல் அளவை திணைக்களத்தின் மாவட்ட முகாமையாளர்கள் ஆகியோரை இணைத்து விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதன்படி, இந்த மாதம் முழுவதும் சந்தை நடவடிக்கைகளை கண்காணிக்கவும், முரண்பாடுகள் காணப்படுமாயின் அவற்றில் தலையிட்டு சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதன்மூலம், நுகர்வோருக்கு பாதிப்பு ஏற்படுத்தப்படும் சந்தர்ப்பங்களில் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க முடியும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.