தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தொற்றா நோய் தொடர்பான பரிசோதனைகள்!


(பாறுக் ஷிஹான்)
(நூருள் ஹுதா உமர்)


தென்கிழக்குப் பல்கலைக்கழகம் மற்றும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால்  செய்யப்பட்ட இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கமைவாகவும் தொற்றா நோய்த்தடுப்பு வாரத்தினை முன்னிட்டும் இன்று (26) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ .எல் .எம் .றிபாஸின் ஆலோசனைக்கு அமைவாக தொற்றா நோய்த் தடுப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.ஐ.எம்.எஸ் இர்சாத் மற்றும் குழுவினரால் தென்கிழக்குப் பல்கலைக்கழக கல்விசார் உத்தியோகத்தர்களுக்கு தொற்றா நோய் தொடர்பான பரிசோதனைகளும் ஆலோசனைகளும் வழங்கும் நிகழ்வு பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.

 இந் நிகழ்வில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர்  தென்கிழக்குப் பல்கலைக்கழகம் மற்றும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால்  செய்யப்பட்ட இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கமைவாக முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்களின் இணைப்பாளராக செயற்படும் வைத்தியர் எம்.எச்.எம்.சரூக் ஆகியோர் கலந்து கொண்டதுடன் குறித்த நிகழ்வுகளை மேற்பார்வை செய்தமையும் குறிப்பிடத்தக்கது.