கல்குடா அருள்மிகு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு உற்சவ 108 அஷ்டோத்திர சங்காபிஷேகமும் பாற்குட பவனியும்!

(ரூத் ருத்ரா)

மட்டக்களப்பில் புகழ்பெற்ற ஆலயங்களில் ஒன்றான வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கல்குடா அருள்மிகு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு உற்சவ நிகழ்வில் மூன்றாவது நாளாகிய இன்று 108 அஷ்டோத்திர சங்காபிஷேகமும் பாற்குட பவனியும்  திருக்கல்யான சடங்கு நிகழ்வும் இனிது நடைபெற்றது.

இன்று காலை கல்குடா ஆலயடிப் பிள்ளையார் ஆலயத்தில் விநாயகர் வழிபாட்டுடன் கிரியைகள் ஆரம்மாகி பக்த்தர்கள் தங்களது நேர்த்திக் கடனை செலுத்தும் முகமாக தலையில் பாற்குடம் சுமந்து  ஊர்வலமாக பாசிக்குடா வீதி வழியாக ஆலயததினை சென்றடைந்தனர்.அங்கு சங்காபிஷேகம் நடைபெற்று அம்மனுக்கு எடுத்துவரப்பட்ட பால் அபிஷேகம் செய்யப்பட்டது.

மாலை விசேட பூசை நடைபெற்று தேவாதிகள் அருள் ஆசியுடன் திருக்கல்யான கால் வெட்டும் நிகழ்வும் நடைபெற்றது.

ஆலயத்தில் வருடாந்த திருச்சடங்கானது கடந்த 30.05.2023 செவ்வாய்கிழமையன்று ஏகாதசித் திதியும் அத்த நட்சத்திரமும் சித்த யோகமும் கூடிய சுப வேளையாகிய இரவு 7.30 மணிக்கு கல்குடா சமூத்திரத்தில் நீர் எடுத்து வந்து அம்மனின் திருக்கதவு திறத்தலுடன்  உற்சவம் ஆரம்பமாகியது.

தொடர்ந்து 05 நாட்கள் சடங்குகள் நடைபெற்று எதிர்வரும் 04.06.2023 அன்று பூரணை திதியில் குளிர்த்தியுடனும் கும்பம் சொரிதலுடனும் இனிதே நிறைவு பெறும்.உற்சவ நிகழ்வுகள் யாவும் ஆலய பிரதம பூசகர் த.வேலுப்பிள்ளையுடன் கணபதி பூஜா துரந்தரர் சிவஸ்ரீ மு.சண்முகம் குருக்கள்,சங்காபிஷேக குருமார் சிவஸ்ரீ கோ.கபிலேஸ்வரக் குருக்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டு உற்சவ கால திருச்சடங்ககளை நடாத்துவார்கள்.