பொசன் பண்டிகையை முன்னிட்டு படையினரின் சோறு வழங்கும் தான சாலை மட்டக்களப்பில் நடைபெற்றது!

(சிஹாரா லத்தீப்)

பொசன் பண்டிகை முன்னிட்டு இராணுவத்தின்  இலங்கை சிங்க றெஜிமேந்து பதினோராவது படையணி படை அணியினர்   மட்டக்களப்பு குருக்கள் மடம்பகுதியில் சுமார் 5000 பேருக்கு சோற்று  உணவு வழங்கும் தானசாலை ஒன்றினை  நேற்று மாலை நடாத்தினர்.

இராணுவத்தின் சிங்கறெஜிமென்து பதினோராவது படை அணியினரால் அதன்  இணைப்பதிகாரி  மேஜர் நிமல் பத்மஸ்ரீ தலைமை நடைபெற்ற இந்த நிகழ்வில் சுமார் 5000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கலந்து கொண்டு சோற்று உணவு அருந்தினர் இராணுவத்தின் 231 ஆவது படை அணியின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் துளிப்ப மெண்டிஸ் இந்த தானா சாலையை ஆரம்பித்து வைத்தார்.

 இந்த சோற்று உணவு தான சாலையில் இம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பல இனங்கள் சார்ந்த மக்கள் நல்லிணக்கத்தின் அடிப்படையில் கலந்து கொண்டு உணவு அருந்தினர். இந்நிகழ்வில் களுவாஞ்சிக்குடி பிரதேசத்துக்கு பொறுப்பா ன  உதவி பொ லீஸ் அத்தி எட் சேகர் அத்தியட்சகர் ஜகத் ஜயரத்தின, களுவாஞ்சிக்குடி பொலிஸ் பொறுப்பதிகாரி டி. அபே விக்ரம இந்து இஸ்லாம் கிறிஸ்தவ மதகுருமார்கள் மற்றும்பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

 இந்த பொசன் தான  சாலையில் பல்லின மக்களும் கலந்து கொண்டு இன நல்லுறவை வலியுறுத்தும் வகையில் கலந்து கொண்டமை சிறப்பு அம்சமாகும்

.