இலங்கையில் நோய்வாய்ப்பட்டுள்ள யானையை தாய்லாந்திற்கு கொண்டு செல்ல தீர்மானம் : யானைப்பாகன்கள், விமானங்களை அனுப்பவுள்ளது தாய்லாந்து!

இலங்கையில் நோய்வாய்ப்பட்ட  யானையை மீண்டும் தாய்லாந்திற்கு கொண்டு செல்வதற்காக விமானமொன்றையும் யானைபாகன்களையும் தாய்லாந்து இலங்கைக்கு அனுப்பவுள்ளது.

இலங்கையில் நோய்வாய்ப்பட்ட நிலையில் உள்ள சக்சுரின் யானை  கிசிச்சைக்காகவும் புனர்வாழ்விற்காகவும் அடுத்தமாதம் தாய்லாந்திற்கு கொண்டுசெல்லப்படும் என பாங்கொக்போஸ்ட் தெரிவித்துள்ளது.

யானையின் நிலை அது பயணம் செய்யக்கூடிய நிலையில் உள்ளதா போன்ற விடயங்களை ஆராய்வதற்காக இலங்கைக்கு அனுப்பப்பட்ட விலங்குவைத்தியர்களின் மதிப்பீடுகளின் அடிப்படையில் அடுத்தமாதம் யானை தாய்லாந்திற்கு கொண்டுவரப்படும் என  தாய்லாந்தின் தேசிய பூங்காக்கள் வனவிலங்கு தாவரபாதுகாப்பு திணைக்களத்தின் பிரதிபணிப்பாளர் நாயகம் அட்டபோல் சரோன்சன்சா தெரிவித்துள்ளார்.

இலங்கையிலிருந்து யானையை கொண்டுவர ரக விமானம் அனுப்பப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

தாய்லாந்தினால்  இலங்கைக்கு  இரண்டு தசாப்தங்களிற்கு முன்னர் அன்பளிப்பாக வழங்கப்பட்ட யானை சக்சுரின்  நோய்வாய்ப்பட்டுள்ளதாலும் மோசமான நிலையில் வைக்கப்பட்டுள்ளதாலும் அதனை மீள தாய்லாந்திற்கு கொண்டு செல்வதற்கு  தாய்லாந்து அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர் என அந்த நாட்டின் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கையுடனான தொடர் சந்திப்புகளின் பின்னரும் மிருகவைத்தியர்கள்   இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டதை தொடர்ந்தும் சக்சுரினை எப்போது தாய்லாந்திற்கு மீள கொண்டுவருவது என தீர்மானித்துள்ளதாக தாய்லாந்தின் இயற்கை வளங்கள்மற்றும் சூழல்விவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சக்சுரின் தாய்லாந்திற்கு மீள வரக்கூடிய நிலையில் உள்ளதா என்பதை ஆராய்வதற்காக மிருகவைத்தியர்கள் குழுவொன்று இலங்கை சென்றதுஇ என தெரிவித்துள்ள  அமைச்சர்  முழுமையான விபரங்களை திரட்டிய பின்னர் ஜூன் மாதம் யானையை  தாய்லாந்திற்கு  கொண்டுவரதீர்மானித்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் விலங்குகள் உரிமை பாதுகாப்பிற்காக குரல் கொடுக்கும் ரார் என்ற அரசசார்பற்ற அமைப்பொன்று சக்சுரின்  மிகமோசமான நிலையில் வைக்கப்பட்டுள்ளமை குறித்து தாய்லாந்து அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தியதை தொடர்ந்தே  தாய்லாந்து அரசாங்கம் இந்தநடவடிக்கையை எடுத்துள்ளது.

ஆண்யானைக்கு உடனடியாக சிகிச்சைதேவைப்படுகின்றது என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த வருட ஆரம்பத்தில் யானையை  தாய்லாந்திற்கு கொண்டுவரஎண்ணியிருந்தோம்இ எனினும் விலங்கின் நிலைமையை கருத்தில் கொள்ளும்போது கடல் வழியாக கொண்டுவருவதை விட வான்மார்க்கமாக கொண்டுவருவதே சிறந்தது என நிபுணர்கள்  தெரிவித்தனர் என தாய்லாந்தின் அமைச்சர் தெரிவித்துள்ளார்- கடல்வழியாக கொண்டுவருவது நீண்டகாலம் பிடிக்கும் செயல் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சி 130 விமானத்தில் யானையை ஏற்றுவதற்கான பொருத்தமான கூடு கிடைக்கவில்லை என தெரிவித்துள்ள தாய்லாந்து அமைச்சர் பொருத்தமான விமானத்திற்காக காத்திருக்கின்றோம்இவிலங்கின் பாதுகாப்பிற்காக பொருத்தமான கூடு தயாரிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்..

இலங்கைக்கு வழங்கப்பட்ட மூன்று யானைகளில்ஒன்று சக்சுரின் 

தாய்லாந்தின்வெளிவிவகார அமைச்சு யானையின் நிலை குறித்து அறிந்ததும் தாய்லாந்தின் இயற்கை வளங்கள்மற்றும் சூழல்விவகாரஅமைச்சுடன்இது குறித்து ஆராய்ந்தது.

இதன் பின்னர் கொழும்பில் உள்ள தனது தூதரகத்தை  இது குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டது.

கடந்தவருடம் தாய்லாந்து தூதரகம்  ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்டு யானை நல்லநிலையில் இல்லை என்பதை அதன் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது அது மோசமான நிலையில் வைக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்துகொண்டது.