இலங்கைக்கு தருவிக்கப்படவுள்ள 2 ஆயிரம் மஞ்சள் காமாலைக்கான தடுப்பூசிகள்!


மஞ்சள் காமாலை நோய்க்கான 2 ஆயிரம் தடுப்பூசிகள் இவ் வாரம் இலங்கைக்கு தருவிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மஞ்சள் காமாலை தடுப்பூசிகளானது ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் பாதுகாப்பு நிதியம் (UNICEF) மூலம் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.

இலங்கைக்கு சுமார் 6 ஆயிரம் மஞ்சள் காமாலை தடுப்பூசிகள் தேவைப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆபிரிக்கா நாடுகளுக்குச் செல்லும் அனைத்து இலங்கை பிரஜைகளும் இந்த தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

அந்நாடுகளுக்குச் செல்வதற்காகக் காத்திருக்கும் 5 ஆயிரம் இலங்கையர்கள் இந்த தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதற்காக தற்போதும் காத்திருப்பதாக சுகாதாரத்துறைத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.