லண்டனை தலைமையகமாக கொண்டு இயங்கும் ஒருபானை எனும் அமைப்பினுடாக முதற் கட்டமாக 200 000 ரூபாய் பெருமதியான தளபாடங்கள் மாணவர்களுக்கு கையளிக்கும் நிகழ்வானது இடம்பெற்றது.
ஒருபானை அமைப்பின் பிரதிநிதிகளான திருவாளர் சாய்ராஜன் திருவாளர் முருகதாஸ் அவர்களினால் பாடசாலையின் அதிபர் மற்றும் மாணவர்களிடம் தளபாடங்களை கையளிக்கும் நிகழ்வானது மிக சிறப்பாக இடம் பெற்றதுடன் தேசிய மட்டத்தில் சாதனைகளை படைத்த மாணவர்களுக்கு பரீசில்களையும் வழங்கி கௌரவித்தனர்.
ஒருபானை அமைப்பின் ஸ்தாபகார்கள் ஐயா DR பால சுப்பிரமணியம மற்றும் உதவித் திட்டத்தினை பெற்றுக்கொடுத்த சுவாமிநாதன் ஐயா அவர்களுக்கும் பாடசாலையின் அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் மாணவர்களுக்கான அடுத்த கட்ட தளபாடங்களை பெற்றக்கொடுப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொள்வதாகவும் குறிப்பிடடனர்.
இவ்வாறான பல உதவித்திட்டங்களை பாடசாலைக்கு பல வழிகளிலும் பெற்றுக் கொடுக்கும் சிரேஷ்ட ஆசிரியர் திரு .மேவின் ஆசிரியரை பாடசாலை சமூகம் வெகுவாக பாராட்டியது.