- வெளிநாட்டில் அரசியல் தஞ்சம் அடைவதற்காக மௌலானா பொய்யான கதையை உருவாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் ஒரு வருடத்திற்கு முன்னர் இலங்கையிலிருந்து தப்பிச் சென்று ஐரோப்பிய நாட்டில் புகலிடம் கோரியதாகத் தெரிவிக்கப்படுகிறது
- எவ்வாறாயினும், சந்திப்பு நடந்ததாகக் கூறப்படும்காலப்பகுதியில் தான் இலங்கையில் இருக்கவில்லை என்பதை சுரேஷ் சா லே மறுத்துள்ளார் என்பதைசொல்வது நியாயமான முறையில் அவசியமாகும் .
- குண்டுவெடிப்புக்குப் பிறகு சிறையில் இருந்த பிள்ளையானைச் சந்தித்தபோது ரிஎம் வி பி . தலைவர், இதைப் பற்றி யாரிடமும் பேசாமல் அமைதியாக இருக்க வேண்டும் என்று சொன்னதாக கூறப்படுகிறது
ஹன்சீர் அ சாத் மௌலானா சனல் 4 ஆவணப்படத்தில் இடம்பெற்ற முக்கிய விசில்ப்ளோவர் [சட்டவிரோதமான அல்லது ஒழுக்கக்கேடான செயலில் ஈடுபடுவதாகக் கருதப்படும் ஒருவர் அல்லது அமைப்பு குறித்து தெரிவிக்கும் நபர். ஆவார்.] முன்னாள் ஜனாதிபதிகோத்தா பய ராஜபக்ச ஷ, அரச புலனாய்வுப் பிரிவின் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே மற்றும் பிள்ளையான் என பரவலாக அறியப்படும் கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன் ஆகியோருக்கு எதிராக அ சாத் மௌலானா சில திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டார். கோத்தாபய , சுரேஷ் மற்றும் பிள்ளையான் ஆகியோர் குற்றச்சாட்டை மறுத்துள்ளனர்.
வெளிநாட்டில் அரசியல் தஞ்சம் அடைவதற்காக மௌலானா பொய்யான கதையை உருவாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் ஒரு வருடத்திற்கு முன்னர் இலங்கையிலிருந்து தப்பிச் சென்று ஐரோப்பிய நாட்டில் புகலிடம் கோரியதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த பத்தியில் , அ சாத் மௌலானா எவ்வாறு , ஏன் இலங்கையை விட்டு வெளியேறி மேற்குலகில் அகதியானார் என்பதுதான் மையமாக இருக்கும்.
அ சாத் மௌலானாவின் அனைத்துக் குற்றச்சாட்டுகளும் இன்னும் சரிபார்க்கப்பட்டு அங்கீகரிக்கப்படவில்லை என்பதை ஆரம்பத்தில் வலியுறுத்த வேண்டும். மேலும், குறிப்பாக மேஜர் ஜெனரல் சாலே க்கு எதிராக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டவர்களால் அவை பொய்யானவை என்று மறுக்கப்பட்டது. புத்தளம் கரடிப்பூவலில் உளவுத்துறைத் தலைவருக்கும் தேசிய தௌஹீத் ஜமாத் தலைவரும் உயிர்த்தஞாயிறு குண்டுவெடிப்புக்குப் பின்னணியில் இருந்தவருமான சஹ்ரான் ஹாஷிமுக்கும் இடையே நடந்த சந்திப்பை மையமாக வைத்து சாலே மீதுமௌலானாவால் குற்றச்சாட்டுசுமத்தப்பட்டிருந்தது .
ஆவணப்படத்தில் கூறப்பட்டுள்ள மௌலானாவின் குற்றச்சாட்டு அந்த சந்திப்பின் அடிப்படையில் அனுமானம் ஆகும்.
எவ்வாறாயினும், சந்திப்பு இடம்பெற்றதாகக் கூறப்படும் வேளையில் அவர் இலங்கையில் இருக்கவில்லை என்பதை சுரேஷ் சாலே மறுத்துள்ளார் என்பதை நேர்மையானமுறையில் கூறப்பட வேண்டியது அவசியமாகும் . அதுசா லே வால் நிரூபிக்கப்பட்டால், அ சாத் மௌலானாவின் முக்கிய குற்றச்சாட்டு ” துல்லியமற்றசொல்லாக ” [பொய்யாக] மாறும். அதன்பின் அவரது நம்பகத்தன்மை பறிபோகும்.
இந்தப் பின்னணியில்தான் அ சாத் மௌலானா இலங்கையிலிருந்து தப்பிச் சென்றதற்கான காரணங்களையும், அவர் வெளிநாட்டில் தஞ்சம் புகுந்த விதமும் ம் அலசப்படு கிறது. அ சாத் மௌலானாவுடன் இதுவரை என்னால் உரையாட முடியவில்லை, ஆனால் அவரது கிராமமான மருதமுனையில் வசிப்பவர்கள் முதல் அவரது வழக்கின் அனைத்து அம்சங்களையும் நன்கு அறிந்த சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களின் ஆர்வலர்கள் வரை பல தகவலறிந்த ஆதாரங்களுடன் தொடர்பு கொண்டு வருகிறேன்.
மௌலானா பல அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட ஊடகவியலாளர்களிடம் கூறியதாகக் கூறப்படும் ஒரு நீண்ட அறிக்கையின் சாரங்களையும் படித்துள்ளேன்.
இது அடிப்படையில் அ சாத் மௌலானாவின்அறிக்கை என்பதை மீண்டும் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தக் கதை சுரேஷ், பிள்ளையான் போன்றவர்களின் நிலைப்பாடுகளுக்கு எதிரானது.
பிள்ளையானின் இன்றியமையாத உதவியாளர்
முன்னர் கூறியது போல், மொஹமட் ஹன்சீர் எனும் அ சாத் மௌலானா பிள்ளையானுக்கு இன்றியமையாத உதவியாளராக இருந்தார் . அவர் பிள்ளையானின் தனிப்பட்ட செயலாளராகவும் ரி எம் வி பி . யின் பேச்சாளராகவும் இருந்தார். மௌலானா தமிழ், ஆங்கிலம் மற்றும் சிங்களம் ஆகிய மொழிகளில் நியாயமான புலமை பெற்றிருந்ததால், சில அரசியல் தலைவர்கள், அரசாங்க அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினரைக் கையாளும் போது பிள்ளையான் நம்பியிருந்த மொழிபெயர்ப்பாளர் மற்றும் உரை பெயர்ப்பாளராக இருந்தார்.
பிள்ளையான் தனது “தமிழ்” பிரதிநிதிகள் பலரை விட “முஸ்லிம்” ஹன்சீரை நம்பினார்.
இது சிலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது
இலங்கைப் புலனாய்வுப் பிரிவினர் ரி எம் வி பி க்கு மாதந்தோறும் 35 இலட்சம் செலுத்திக் கொண்டிருந்த போது, அதனை ரி எம் வி பி சார்பாக வழமையாக வசூலித்தவர் மௌலானா. ஹன்சீரின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் பெரிய தொகையான ரி எம் வி பிபணமும் சில நேரங்களில்வைப்பிலிடப்பட்டது .
மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் பிள்ளையான் ஐந்து வருடங்களுக்கும் மேலாக சிறையில் இருந்த போது, நீதிமன்ற அனுமதியுடன் ஒவ்வொரு சனிக்கிழமையும் பிள்ளையானை சந்திப்பது அ சாத் தான். மௌலானா ரிஎம். வி. பி வட்டாரங்களுக்குள் என்ன நடக்கிறது என்பதை பிள்ளையானுக்குத் தெரிவித்ததோடு, பிள்ளையானின் அறிவுறுத்தல்களையும் கட்சி உறுப்பினர்களுக்கு வழங்கினார். பிள்ளையானின் வழக்கு தொடர்பான அனைத்து சட்டப் பணிகளையும் மௌலானா ஒருங்கிணைத்தார்.
ஹன்சீர் தனது உறவினரான பாணந்துறையைச் சேர்ந்த பாத்திமாவை மணந்துள்ளார். இவர்களுக்கு ஆயிஷா என்ற மகளும், முபாரக் என்ற மகனும் உள்ளனர். தெஹிவளை எப னேசர் பிளேஸில் குடும்பம் வசித்து வந்தது.
பிள்ளையானின் உதவியாளராக கடமையாற்றிய மௌலானா, சைக்கிள் அசெம்பிள் செய்தல் மற்றும் மொத்தமாக குடிநீர் விநியோகம் போன்ற வர்த்தக நடவடிக்கைகளிலும் ஈடுபட்டார். அவரது அரசியல் தொடர்புகளைப் பயன்படுத்தி, அ சாத் ஒரு “செல்வாக்கான வியாபாரி”யாகவும் இருந்தார். மௌலானாவின் மாத வருமானம் ஏழு இலக்கங்களில் இருந்ததாக கூறப்படுகிறது.
2019ஏப்ரல் உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு வரை ஹன்சீருக்கு எல்லாமே கவலையாக இருந்தது. மௌலானாவின் சாட்சியத்தின்படி, தேவாலயங்கள் மற்றும் சுற்றுலா ஹோட்டல்கள் மீதான கொடூரமான தாக்குதல்களுக்கு ச ஹ்ரானும் ஏனைய என் ஜே ரி செயற் பாட்டாளர்களும் காரணம் என்று தெரிந்ததும் அவர் வருந்தினார்.
ச னல் 4 படத்தில் ஹன்சீர் கூறியது போல், அவர்சா லே மற்றும் சஹ்ரான் இடையே முதல் சந்திப்பை ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது. குண்டுவெடிப்பு நடந்த அன்று சுரேஷ் சா லே தன்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் இருந்து ஒருவரை ஏற்றிச் செல்லுமாறு கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார் . அப்போது மட்டக்களப்பில் இருந்ததால் ஹன்சீரால் அவ்வாறு செய்ய முடியவில்லை. தெஹிவளை ஹோட்டல் வெடிப்பில் இறந்த குண்டுதாரி தாஜ் சமுத்திரத்தில் இருந்தவர் என்பது பின்னர் தெரியவந்தது.
குண்டுவெடிப்புக்குப் பிறகு சிறையில் இருந்த பிள்ளையானைச் சந்தித்தபோது, ரி எம் வி பி தலைவர், இதையெல்லாம் பற்றி அமைதியாக இருக்குமாறும், யாரிடமும் பேச வேண்டாம் என்றும் கூறியதாகக் கூறப்படுகிறது.
2019 நவம்பரில் கோத்தா பய ராஜபக்ச ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். குண்டுவெடிப்புகளுக்குப் பிறகு, நாட்டைப் பாதுகாப்பாக வைத்திருக்க ஒரு வலிமையான மனிதனுக்காக வாக்காளர்கள் ஏங்கினார்கள்.
சந்தேகத்திற்குரிய தொடர்புகள்
2019ஏப்ரல்உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்குப் பிறகு, தேசிய தவ்ஹீத் ஜமாத் குண்டுதாரிகளுக்கும் இலங்கையின் புலனாய்வுத் துறையின் உயர் அதிகாரிகளுக்கும் இடையே சந்தேகத்திற்கிடமான தொடர்புகள் இருப்பதாக அரசியல்வதந்திகள் பரபரப்பாக பேசப்பட்டது. பிரபலமான வதந்திகள் அரசாங்க அதிகாரிகளுக்கும் இஸ்லாமிய குண்டுவீச்சாளர்களுக்கும் இடையே சாத்தியமான தொடர்பு பற்றியது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் கோத்தாவை ஆட்சிக்கு கொண்டுவருவதற்கான சதி என்று பேசப்பட்டது. சதி கோட்பாடுகள் இலங்கையில் ஏராளமாக உள்ளன, அப்போது இதை உள்வாங்கிக்கொள்பவர்கள் குறைவாகவே இருந்தனர்.
2021மார்ச்சில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்களான அனுரகுமார திஸாநாயக்க (ஜே.வி.பி) மற்றும் மனுஷ நாணயக்கார (ஐ. ம. ச ) ஆகியோர் விவாதத்தின் போது உயர் புலனாய்வு அதிகாரிகள்உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு சதியில் சம்பந்தப்பட்டிருப்பது குறித்து பல குறிப்புகளை வெளியிட்டனர். 2021ஏப்ரலில் , அப்போதையஐக்கியமக்கள் சக்தி பாரா ளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ, 2019 ஏப்ரல்தாக்குதல்களில் உயர் புலனாய்வு அதிகாரி ஒருவருக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் பல பரபரப்பான தகவல்களை பாரா ளுமன்றத்தில் வெளியிட்டார்.
ஹரின் பெர்னாண்டோ வெளிப்படையாக பெயர்களைக் குறிப்பிடாமல் கவனமாக இருந்தார், ஆனால் அந்த குறிப்புகள் அரச புலனாய்வு சேவையின் ( தலைவரான மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே யைப் பற்றியதென அனுமானிக்கப்பட்டது. சா லே இதற்கு முன்னர் இராணுவ உளவுத்துறையின் தலைவராக இருந்தவர். 2015ல் சிறிசேன – விக்ரமசிங்க அரசு பதவிக்கு வந்த பிறகு மலேசியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் ஆலோசகராகப் பணியாற்றினார். 2019ல் சுரேஷ் சா லே பாதுகாப்புகற்கை நெறிக்காக இந்தியாவுக்குச் சென்றுஉயிர்த்தஞாயிறு குண்டுவெடிப்பு நடந்தபோது புதுடி ல்லியில் இருந்தார்.
2021 அக்டோபரில் ,உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள்பற்றி ,சர்வதேசஇணையவழிகருத்தரங்கு இடம்பெற்றது கொழும்பு கத்தோலிக்க பேராயர் கர்தினால் ம ல்கம் ரஞ்சித் மற்றும் நன்கு அறியப்பட்ட கத்தோலிக்க மதகுரு சகோ.. சிறில் காமினி ஆகியோர் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர். மேஜர் ஜெனரல் சுரேஷ் சா லே குண்டுவெடிப்பில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சில கருத்துக்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து, ஜெனரல் சா லேஅருட்தந்தை சிறில் காமினி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். மதகுரு தெரிவித்த சில கருத்துக்கள் தனது (சா லேயின்) நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக சிறில் காமினி குற்றஞ்சாட்டினார்
ஒளி நாடா பிரதிமை
இணையவழிகருத்தரங்கிற்கு சில நாட்களுக்குப் பிறகு, ஜெனரல் சா லே, ஹன்சீர் ஆசாத் மௌலானாவைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரைச் சந்திக்க விரும்பினார். மௌலானாவின் கூற்றுப்படி, ஹரின் பெர்னாண்டோ மற்றும் ஏனைய எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஹன்சீருக்கு பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைகளின் வீடியோ காட்சிகளை ஹன்சீருக்கு சா லே காண்பித்திருந்தார். கர்தினால் மல்கம் ரஞ்சித் மற்றும் சகோ. சிரில் காமினியால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின்ஒளி நாடா பிரதிமைகளையும் காண்பித்திருந்தார் .
ஹன்சீரிடம்எஸ். ஐ. எஸ் . பணிப்பாளர் , “சஹ்ரானையும் மற்றஎன்ரி ஜே உறுப்பினர்களையும் சந்தித்தது உங்களுக்கும் எனக்கும் பிள்ளையானுக்கும் மட்டுமே தெரியும். இதை நீங்கள் மற்றவர்களுக்கு வெளிப்படுத்தினீர்களா? எம்.பி.க்களும் கத்தோலிக்க பாதிரியார்களும் ஏன் என்னை குண்டுவீச்சாளர்களுடன் தொடர்புபடுத்தி இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்?என்று கூறியுள்ளார்
ஹன்சீரின் கூற்றுப்படி, புத்தளம் கூட்டம் பற்றி வேறு யாரிடமும் கூறவில்லை. அப்போது ஹன்சீரின் கைபேசியை சாலே சோதனை செய்துள்ளார். சுமார் மூன்று மணிநேர வாய்மொழி விசாரணைக்குப் பிறகு, சா லே ஹன்சீரை வெளியேற அனுமதித்தார்.
அ சாத் மௌலானா கூறுகையில், இந்த சோதனையால் தாம் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், வேதனையடைந்ததாகவும் கூறுகிறார். சுரேஷ் சா லே இவ்வளவு கோபமாகவும் கடுமையாகவும் இருப்பதை அவர் பார்த்ததே இல்லை. ஹன்சீர் மட்டக்களப்பில் உள்ள பிள்ளையானுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடந்ததைக் கூறினார். ரி எம் வி பி தலைவர் கவலை வேண்டாம் என்றும், மறுநாள் கொழும்பு வருவதாகவும், சாலே வை சந்தித்து பேசி தீர்த்து வைப்பதாகவும் கூறியிருந்தார். பிள்ளையான் மறுநாள் கொழும்பு வந்தார்.
அவர்களை சந்திக்கபிள்ளையான் செல்லும் போது ஹன்சீர் அவர்களுடன் செல்வது வழமையான நடைமுறையாகும். ஆனால் இச்சந்தர்ப்பத்தில் பிள்ளையான் ஹன்சீர் இல்லாமலேயே சாலே யை சந்தித்துள்ளார். பிள்ளையானின் சாரதி அமலன் மூலமாகத்தான் பிள்ளையான் சாலே வைச் சந்தித்ததை ஹன்சீர் அறிந்துகொண்டார். சஹ்ரான் சந்திப்பு பற்றிய தகவல்களை கசியவிட்டதற்காக சுரேஷ் சா லே தன்னை (ஹன்சீர்) சந்தேகிக்கிறார் என்று பிள்ளையான் பின்னர் ஹன்சீரிடம் கூறினார்.
சில வாரங்களின் பின்னர் பிள்ளையான் அ சாத் மௌலானாவை மட்டக்களப்புக்கு கூட்டத்திற்கு வருமாறு கூறியிருந்தார். அவர் புறப்படுவதற்கு முன், புலனாய்வுப் பிரிவில் உள்ள ஒரு முஸ்லி ம் நண்பரிடமிருந்து தனக்கு அழைப்பு வந்ததாக ஹன்சீர் கூறுகிறார். மட்டக்களப்பில் போலியான “விபத்து” ஒன்றின் மூலம் மௌலானாவை கொல்ல சதி நடப்பதாக எச்சரித்த அவர், போகவேண்டாம் என்றும் அறிவுறுத்தினார்.
மௌலானா பிள்ளையானிடம் தனக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதாகவும் மட்டக்களப்புக்கு வரமுடியவில்லை என்றும் கூறியிருந்தார்.
இலங்கையில் இருந்து தப்பிச் செல்லுதல்
ரி எம் வி பி மற்றும்/அல்லது உளவுத்துறையால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக அ சாத் மௌலானா இப்போது கவலைப்பட்டார். இலங்கையில் இருந்து தப்பிசெல்ல முடிவு செய்தார். இலங்கையில் இருந்து புறப்படுவதை தாமதப்படுத்தினால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதை உணர்ந்த அ சாத் மௌலானா முதலில் இந்தியா சென்றார்.
சுவிட்சர்லாந்திலிருந்து மனிதாபிமான விசாவைப் பெறுவதே அவரது நோக்கமாக இருந்தது. சுவிட்சர்லாந்து பின்வரும் அடிப்படையில் தனிநபர்களுக்கு மனிதாபிமான விசாக்களை வழங்குகிறது.
* தனிநபரின் வாழ்க்கை மற்றும் உயிருக்கு நேரடியாக, தீவிரமாக மற்றும் உறுதியான முறையில் அவர்களின் சொந்த நாட்டில் அல்லது பிறந்த நாட்டில் ஆபத்தில் உள்ளது.
* தனிநபர் நேரடியாக ஆபத்தில் உள்ளார், மேலும் அவர்கள் ஆபத்தான குழுவைச் சேர்ந்தவர்கள் என்பதால் வெறுமனே ஆபத்தில் இல்லை.
* தனிநபருக்கு இனி வேறு எந்த விருப்பமும் இல்லை மற்றும் அவர்களின் நிலைமைக்கு சுவிஸ் அதிகாரிகளின் அவசரத் தலையீடு தேவைப்படுகிறது.
முகமது ஹன்சீர் என்ற அ சாத் மௌலானா ஐரோப்பாவிற்கு சென்று அரசியல் தஞ்சம் கோரினார். ஜெனீவாவை தளமாகக் கொண்டஐ. நா. மனித உரிமைகள் பேரவை ஐரோப்பாவில் வாழும் இலங்கை ஊடகவியலாளர் மற்றும் மனித உரிமை ஆர்வலர் மற்றும் சுயமாக வெளியேறிய முன்னாள் இலங்கை அரசாங்க அதிகாரி ஆகியோர் ஐரோப்பாவிற்கு இடம்பெயர்வதற்கு அ சாத் மௌலானாவுக்கு பெரும் உதவியாக இருந்ததாக அறியப்படுகிறது.
தற்போது பாகிஸ்தானில் வசிக்கும் இலங்கை முஸ்லிம் வைத்தியரும் உதவியுள்ளார் .
மனிதஉரிமைகள் பேரவை உயர் ஸ்தானிகர் அலுவலகம்
ஐரோப்பாவுக்குச் சென்ற அ சாத் மௌலானா, ஐ.நா மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்குச் சென்று இலங்கை பொறுப்புக்கூறல் திட்டத்தின் குழுவிடம் விரிவான அறிக்கை ஒன்றை அளித்தார். அவர் சாட்சியமளிக்க ஐந்து நாட்கள் எடுத்துக் கொண்டார். “தகவல் மற்றும் ஆதாரங்களை சேகரித்தல், ஒருங்கிணைத்தல், பகுப்பாய்வு செய்தல் , பாதுகாத்தல் மற்றும் இலங்கையில் முழுமையான மனித உரிமை மீறல்கள் அல்லது சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கடுமையான மீறல்களுக்கு எதிர்கால பொறுப்புக்கூறல் செயல்முறைகளுக்கான சாத்தியமான உத்திகளை உருவாக்குதல், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிர் பிழைத்தவர்களுக்காக வாதிடுதல், மற்றும் தகுதிவாய்ந்த அதிகார வரம்பில் உறுப்பு நாடுகள் உட்பட தொடர்புடைய நீதித்துறை மற்றும் ஏனைய நடவடிக்கைகளை ஆதரித் தல் என்பது இத்திட்டத்திற்கான ஆணையாகும்
உயர் ஸ்தானிகர் அலுவலகம் தவிர, மௌலானா பல மனித உரிமை அமைப்புகள் மற்றும் சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் அறிக்கைகளை அளித்துள்ளார். பல சட்ட அமு லாக்க நிறுவனங்கள் மற்றும் புலனாய்வு அமைப்புகளால் அவர் பேட்டி காணப்பட்டுள்ளார்
மௌலானா அவசர அவசரமாக இலங்கையை விட்டு வெளியேறிய போதிலும், பல போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான பல ” ஆதாரங்களை” தன்னுடன் எடுத்துச் சென்றதாக அறியப்படுகிறது. சனல் 4 படத்தில் வெளிவந்தது சிறிய பாகம்மட்டுமே. .
ஆதாரங்களுடன் ஈர்க்கப்பட்டமை மௌலானாவை நேர்காணல் செய்த ஒரு சிரேஷ்ட அரசு சாரா நிறுவன அதிகாரி, அவர் அவரைக் கவர்ந்ததாக இந்த பத்தியில் கூறினார்.
“ஹன்சீரிடம் உள்ள ஆதாரங்கள் என்னை மிகவும் கவர்ந்தன என்று என்னால் சொல்ல முடியும். நான் அவரைச் சந்தித்து நேர்காணல் செய்தேன், மேலும் அவரை மிகவும் நம்பத்தகுந்தவராகக் கண்டேன், இருப்பினும், நிச்சயமாக, நாம் சரிபார்த்து மேலும் உறுதிப்படுத்த வேண்டும்,” என்று அவர் கூறினார்.


.jpg)





.jpeg)

.jpeg)


