Thambiluvil Madhya Maha Vidiyalaya Sports meet



திருக்கோவில், தம்பிலுவில் மத்திய மகாவித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி நேற்று பாடசாலை மைதானத்தில் இனிதே நடைபெற்றது. இவ்வருடம் கம்பர் இல்லம் வெற்றிக் கிண்ணத்தை தட்டிக்கொண்டுள்ளது.

விளையாட்டு போட்டியில் கலந்துகொண்டு வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவில் அம்பாறை மாவட்டத்திற்கான ஜனாதிபதி இணைப்பாளர் திரு.இனிய பாரதி அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்ததுடன் கல்வித்திணைக்களத்தைச் சேர்ந்த பல உயரதிகாரிகள் மற்றும் பிரதேச பிரமுகர்களும் வெற்றியீட்டிய மாணவர்களை பாராட்டி கௌரவித்திருந்தனர்.