அம்பாறை மாவட்டத்தில் பெய்த திடீர் மழையினைத் தொடர்ந்து மாவட்டத்தின் அநேகமான பகுதிகளில் சிறுபோக வேளாண்மை செய்கைக்காகவயல்களை உழும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்!!!!!!!

அண்மையில் அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட பாரிய வெள்ளப்பெருக்கினால் பெரும் போகத்தின் போது செய்கை பண்ணப்பட்டு அறுவடைக்கு தயாராகவிருந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் வயல் நிலங்கள் அழிவுக்குட்பட்டு விவசாயிகள் பெரும் நஷ்டத்தை எதிர்நோக்கிய நிலையில் மனம் தளராமல் மீண்டும் சிறுபோக வேளாண்மை செய்கைக்கு தயாராகி வருகின்றனர்.

விவசாய காப்புறுதி திணைக்களம் வயல்களை காப்புறுதி செய்தவர்களுக்கே நஷ்டஈடு வழங்க முன்வந்துள்ள நிலையில் காப்புறுதி செய்யாமல் நஷ்டத்தை எதிர்கொண்ட விவசாயிகள் சிறுபோக வேளாண்மை செய்கையினை ஆரம்பிப்பதற்கு முதல் இல்லாத நிலையில் விதை நெல்லுக்கான பாரிய தட்டுப்பாட்டினையும் எதிர்கொண்டு வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசாங்கம் உறுதியளித்தது போன்று விதை நெல்லையும் மானிய அடிப்படையில் வழங்கப்பட்டு வரும் உரத்தினையும் இலவசமாக வழங்கத் துரித நடவடிக்கை எடுக்குமாறு விவசாயிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கேட்டுள்ளனர்.