மட்டக்களப்பு மாவட்டத்தில் மர்மமனிதர்களின் தொல்லையால் மக்கள் அமைதி இழந்திருக்கும் நிலையில் படுவான்கரையில் உள்ள ஆறு கிராமங்களைச்சேர்ந்த மக்கள் ஒன்று திரண்டு இன்று காவல்நிலையத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் செய்ததால் காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தனர்.
மக்கள் வீதிகளை மறித்து ரயர்களை போட்டு எரித்தனர். வீதிதடைகளை ஏற்படுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கரவெட்டி, நாவற்காடு, ஈச்சந்தீவு, ஆகிய கிராமங்களிலிருந்து ஆரம்பமான ஆர்ப்பாட்ட ஊர்வலம் வவுணதீவு காவல்நிலையத்தை சென்றடைந்தது.
ஆயிரக்கணக்காக திரண்ட மக்களை கண்ட காவல்துறையினர் சிறிது நேரம் முகாம்களுக்குள்ளேயே முடங்கியிருந்தனர்.
சம்பவத்தை கேள்வியுற்ற மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன், சி.யோகேஸ்வரன் ஆகியோர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
காவல்நிலையத்தை சுற்றி தீ மூட்டி எரித்தனர்.
மர்மமனிதர்கள் என்ற அச்சத்தினால் கரவெட்டி கிராம இளைஞர்கள் அனைவரும் இணைந்து நேற்றிரவு பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது அவ்வழியால் பொலிஸ்காவல் அரணில் இருக்கும் பொலிஸாருக்கு உணவு கொண்டு சென்றவர்கள் பொலிஸார் மீது இளைஞர்கள் தாக்கியுள்ளனர். மர்மமனிதர்கள் என்ற சந்தேகத்திலேயே இளைஞர்கள் இவர்கள் மீது தாக்கியுள்ளனர்.
மறைந்திருக்கும் மர்மமனிதர்களுக்காக உணவு கொண்டு செல்கிறீர்கள் என கேட்டு தம்மை அக்கிராம இளைஞர்கள் தாக்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அங்கு வந்த மேலதிக பொலிஸார் அந்த இளைஞர்கள் மீது தாக்கியதாகவும் இதனையடுத்தே இன்று காலையில் அக்கிராமங்களைச்சேர்ந்த மக்கள் பொலிஸாருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர்.
கிராமத்தின் காவல்கடமையில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கேள்விப்பட்ட கரவெட்டி, விளாவெட்டவான், கொடுவாமுனை, நாவற்காடு, ஈச்சந்தீவு, மங்கிகட்டு, வவுணதீவு கிராம மக்கள் இணைந்து இன்று ஈச்சந்தீவு சந்தியில் இருந்து ஆர்ப்பாட்மெடுத்து வவுணதீவுப் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட முயற்சித்தனர். இதன் போது கலகத் தடுப்பு பொலிஸார் தயார் நிலையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
வவுணதீவுச் சந்தியில் கூடிய பொது மக்கள் பொலிஸ் வேண்டாம் பொலிஸ் ஒழிக என கோசமிட்டு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இதே வேளை மட்டக்களப்பு நகருக்கான போக்குவரத்தையும் பொது மக்கள் தடை செய்தனர். மட்டக்களப்பு நகர் போக்குவரத்து முற்றாகத் துண்டிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த த.தே.கூ.பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, சீ.யோகேஸ்வரன், பா.அரியநேத்திரன் பொது மக்களின் கோரிக்கைகளை கெட்டறிந்ததுடன் அவர்களது கோரிக்கை தொடர்பாக வவுணதீவுப் பொலிஸ் பொறுப்பதிகாரியுடன் அவரது அலுவலகத்தில் சென்று பேசியதுடன் தொலைபேசியுடாக மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரவிந்திர கரவிட்டவுடனும் தொடர்பு கொண்டு பொது மக்களில் பிரச்சினைகளைத் தெளிவு படுத்தினர்.
இதனடிப்படையில் பொலிஸார் தற்போதய நிலைமை சுமுகமாக ஏற்படும் வரை சீருடையிலே சிவிலிலோ கிராமங்களுக்கு வரமாட்டார்கள் எனவும் பொது மக்கள் மர்ம மனிதர்களில் இருந்து இங்கு உள்ள பொலிஸாரை அடையாளம் காண பொலிஸாரின் புகைப்படங்களை காட்சிக்கு வைப்பதெனவும் தீர்வு காணப்பட்டது .
இத் தீர்வினை பொது மக்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி முன்நிலையில் தெரியப்படுத்தியனை அடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தமது கிராமங்களுக்கு திரும்பி சென்றனர்.