ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட செங்கலடிப் பகுதியில் மற்றுமொரு மர்ம மனிதன் தாக்குதல் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
வீட்டில் இருந்து சாதாரணமாக வெளியில் வந்த என்.நிஷாந்தினி (வயது 19) என்ற இளம்பெண்ணொருவரை அவது காணியினுள் மறைந்திருந்த ஒருவர் திடீரென கட்டிப்பிடுத்து கூறிய ஆயுதத்தினால் கீறியுள்ளார்.
இதனால் தோளிலும் கை பகுதியிலும் காயமுற்ற பெண் செங்கலடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
முகம் முழுவதும் கருப்பு நிறப்பூச்சுடனும் உடல் முழுதும் கிரீஸ் பூசியிருந்த நபர் ஒருவர் தாக்குதலை மேற்கொண்டுவிட்டு ஓடியுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளதுடன், கட்டிப்பிடித்த வேளை மர்ம மனிதனின் உடலில் பூசப்பட்டிருந்த கிரீஸ் பெண்ணிலும் ஒட்டிக்கொண்டதாக தெரிவித்துள்ளனர்.
. .
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4












