மட்டக்களப்பு புதூரில் மர்ம மனிதன் பெண் மீது தாக்குதல்! மருத்துவமனையில் அனுமதி

மட்டக்களப்பு புறநகர்ப்பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு புதூர் வீச்சுக்கல்முனை பகுதியில் மர்ம மனிதனின் தாக்குதலில் யுவதியொருவர் காயமடைந்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.

நேற்று வெள்ளிக்கிழமை இரவு 7.00 மணியளவில் மர்ம மனிதனின் தாக்குதலில் எஸ்.சர்மிளா என்ற யுவதி படுகாயமடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

அவரது வீட்டில் பாய்ந்து வாய்ப்பகுதியில் இடித்ததுடன் இருகைகள் உட்பட்ட உடலின் சில பகுதிகளில் பலமாக இடங்களில் மர்ம மனிதர் கீறியுள்ளார்.

உரிய யுவதி ஓலமிடவே குறித்த மர்ம மனிதன் அவ்விடத்தை விட்டு ஓடிவியுள்ளதாகவும், தற்போது குறித்த யுவதி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.