ஊரணி பிரதேசத்தில் பகலில் கிறீஸ் பூதங்கள் பெண் மீது தாக்குதல் நடாத்தியுள்ளன.

இன்று பகல் தமது வீட்டின் மொட்ட மாடியில் நின்று கொண்டிருந்த யுவதி ஒருவரின் மீது கிறீஸ் பூதங்கள் தாக்குதல் நடாத்தியுள்ளன.

images1குறித் யுவதி தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவரது உடலெங்கும் நிகக்கீறல் காயங்கள் காணப்படுவதாக வைத்தியர் ஒரவர் தெரிவித்தார்.

யுவதி மீதாக தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மட்டக்களப்பு ஊரணி பிரதேசத்தில் பொதுமக்கள் தற்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நேற்று இரவு மட்டக்களப்பு மாவட்டத்தின் பெரும்பாலான பிரதேசங்களில் கிறீஸ் புதங்களின் நடமாட்டம் காணப்பட்டதாகவும் அதற்கு பொலிஸார் எந்தவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை எனவும் தெரிவித்து மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டள்ளனர்.

இதன் காரணமாக பிரதேசத்தின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.