மட்டக்களப்பு மாவட்டத்தில் கிறீஸ் மனிதர்கள் எனச் சந்தேகிக்கப்படுபவர்களால் தாக்குதலுக்குள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வெளியேறிய பெண்களது விபரங்களை பொலிஸ்மா அதிபர் என்.கே.இளங்கக்கோனின் கோரிக்கைக்கு அமைய பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா இன்று அனுப்பி வைத்துள்ளார்.
மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களுக்கான சிவில் பாதுகாப்பு தொடர்பான கூட்டம் மட்டக்களப்பில் நடைபெற்ற போது கலந்த கொண்ட பொலிஸ்மா அதிபரிடம் மட்டக்களப்பில் இடம்பெற்ற கிறீஸ் மனிதர் பிரச்சினையால் பெண்கள் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா கூட்டிக்காட்டிய போது அது பற்றிய விபரங்களை சமர்ப்பித்தால் விசாரணை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்த பொலிஸ்மா அதிபர் விபரங்களை தனக்கு அனுப்பி வைக்குமாறும் பாராளுமன்ற உறுப்பினரைக் கேட்டிருந்தார்.
இதனையடுத்து பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா கிறீஸ் மனிதர்கள் எனக் கூறப்படுபவர்களால் 2011.08.14 ஆம் திகதி தொடக்கம் 2011.09.09 வரையிலான காலப்பகுதியில் வெட்டுக்காயங்களுக்கும்,கீறல்களுக்கும் உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றவர்களின் விபரங்களையும் சம்பவங்களையும் இன்று பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
வெலலாவெளி; --04, மட்டக்களப்பு--; 05, செங்கலடி - 01 என்ற எண்ணிக்கையில் குறித்த பிரதேச செயலகப் பிரிவுகளில் இடம்பெற்ற இந்த சம்பவங்களின் போது கல்லடி தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலையில் 14 வயது மாணவியொருவரும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
14 வயது தொடக்கம் 48 வயது வரையிலான 10 பெண்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற விபரங்களை பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் பொன் செல்வராசா குறிப்பிட்டுள்ளார்.