மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கொக்குவில் விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் கல்வி பயிலும் வறிய மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை தென்கிழக்கு லண்டன் தமிழர் நலன்புரி ஒன்றியத்தின் உதவும்கரங்கள் அமைப்பு வழங்கியுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை ஊடாக வழங்கப்பட்ட இவ் உபகரணங்களை மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் நகர இணைப்பாளர் திரு.த.ரகுநாதன் மற்றும் பேரவையின் பிரதிநிதிகளுடன் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் அவர்கள் நேரடியாகச் சென்று வழங்கிவைத்தார்.
பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஆசிரியர்களும்,மாணவர்களும் அனைவரும் கலந்து கொண்டதுடன் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.