மட்டக்களப்பில் 48.9 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவு

(ஜிப்ரான், எம்.சுக்ரி)

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகப் பெய்துவரும் அடைமழை காரணமாக பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் பல கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 48.9 மில்லிமீற்றர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலைய கடமை நேர அதிகாரி ஏ.ஏம்.சாலிஹீன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்லடி, ஏத்துக்கால், புதிய காத்தான்குடி,கொக்கடிச்சோலை, வெல்லாவெளி, வாகரை, படுவான்கரை, செங்கலடி உட்பட பல இடங்களில் கடும் மழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ளதுடன் பல வீடுகள் நீரில் மூழ்கியுள்ளதை அவதானிக்க முடிகின்றது. தொடர்ந்து இம்மாவட்டத்தில் மழை பெய்யுமென மாவட்ட வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
--