அம்பாறை மாவட்டத்தின் பெரும்பாலான பிரதேசங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதனால் மீண்டும் வெள்ள அபாயம் தோன்றியுள்ளதுடன் குளிரான காலநிலை காணப்படுகின்றது.
இதேவேளை நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் கடும் காற்றுடன் கூடிய மழை வீசிவருவதனால் பல குடியிருப்புக்களின் கூரைகளும் சேதமடைந்துள்ளன.
இது தொடர்பாக அம்பாறை மாவட்ட வானிலை உத்தியோகத்தர் எம்.ஐ.ஏ.நஹீம் தெரிவிக்கையில்,
மழை தொடர்ந்து பெய்வதற்கான காலநிலை காணப்படுகின்ற அதேவேளையில் இன்றும், நாளையும் பலத்த காற்றுடன் கூடிய குளிரான காலநிலை காணப்படுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. இதேவேளை, கடல் கொந்தளிப்பாவும் காணப்படும் என்று அவர் தெரிவித்ததுடன் இது இது தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்கும்படியும் கேட்டுக்கொண்டார்.

--