கடந்த கால யுத்த காலங்களிலிருந்து இற்றை வரை கிழக்கு மாகாணத்தில் பல அர்ப்பணிப்புக்களுக்கு மத்தியில் வயோதிபர்கள்'விஷேட தேவையுடையோர்களை கௌரவிப்பதில் கிழக்கு மாகாண சுகாதார'சமூக சேவைகள் அமைச்சு அதிக அக்கறை செலுத்தி வருவதாக கிழக்கு மாகாண சுகாதார'சமூக சேவைகள் அமைச்சர் எம்.எஸ்.எம்.சுபைர் தெரிவித்தார்.நேற்று(வியாழன்) 'சர்வதேச சிரேஷ்ட பிரஜைகள் மற்றும் விஷேட தேவையுடையோர் தின' விழா கிழக்கு மாகாண சமூக சேவைகள் அமைச்சினால் மட்டக்களப்பு மியானி மண்டபத்தில் இடம்பெற்ற போது பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில்:
வருடாந்தோரும் கிழக்கு மாகாணத்திலுள்ள சகல மாவட்டங்களிலும் வயோதிபர்கள்'விஷேட தேவையுடையோர்களை கௌரவிக்கும் விழாவை கிழக்கு மாகாண சமூக சேவைகள் அமைச்சு நடாத்தி வருகின்றது.
இதனூடாக வயோதிபர்கள்'விஷேட தேவையுடையோர்கள் கௌரவிக்கப்படுவதுடன் அவர்களை சிறந்த முறையில் பராமரிக்கும் இல்லங்கள்' சமூக சேவைகள் உத்தியோகத்தர்கள் ஆகியோரும் பாராட்டி கௌரவிக்கப்படுகின்றனர்.
இவ்வாறான விழாக்கiளின் மூலம் வயோதிபர்கள்'விஷேட தேவையுடையோர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை மாகாண சமூக சேவைகள் அமைச்சு முன்னெடுத்து வருகின்றது.
முதியோர்கள் என்போர் சமூகத்தில் முக்கிய புள்ளிகள்.ஏனென்றால் அவர்களினூடாகத்தான் வரலாற்று உண்மைகளை அறியக்கூடிய நிலைமை உருவானது.
'ஒரு முதியோரின் இழப்பு நூலகமொன்று எரிவதைப் போல'என வெளிநாட்டவர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.அந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் முதியோர்கள்.
ஆகவே அவர்கள் மகிழ்ச்சியுறும் விதத்தில் அவர்களோடு; சிறப்பான முறையில் எவ்வித குறைபாடுகளுமின்றி அவர்களை பராமரிப்பதும் கௌரவிப்பதும் எமது கடமையாகும்.
அடுத்தது விஷேட தேவையுடையோர்கள்.எமது மாகாண சுகாதார'சமூக சேவைகள் அமைச்கின் மாகாணப் பணிப்பாளர் திரு.மணிவண்ணன் கூட ஒரு விஷேட தேவையுடையவர்.
இவர்களது உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் சமூகத்திலுள்ள அனைவரும் புரிந்து கொள்ள முற்படுவதோடு அதற்கேற்ப அவர்களது செயற்பாடுகளையும் செயற்படுத்த பழகிக் கொள்ள வேண்டும்.
தேசிய அரசாங்கம் கூட விஷேட தேவையுடையோருக்கு கல்வித்துறையில் 3.ஃ. வெட்டுப்புள்ளிகளை வழங்கியுள்ளது.
தேசிய அரசும் மாகாண சமூக சேவைகள் அமைச்சும் இணைந்து விஷேட தேவையுடையோரின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதுடன் அவர்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்தும் பல வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.
ஆகவே விஷேட தேவையுடையோர்களின் உணர்வுகளைப் புரிந்து வாழப் பழகிக் கொள்ள வேண்டுமென மாகாண சுகாதார' சுதேச 'சமூக சேவைகள் 'வைத்தியத்துறை அமைச்சர் எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார சுதேச வைத்தியத்துறை அமைச்சர் எம்.எஸ்.சுபைர் 'கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி நீர் வழங்கள் அமைச்சர் எஸ்.உதுமாலெப்பை 'கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திஸாநாயக்க' மாகாண விவசாயத்துறை அமைச்சர் துரையப்பா நவரெத்திணராஜா' கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கே.எல்.எம்.பரீட்'யூ.எல்.எம்.முபீன்'இரா துரைரட்ணம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
(எஃப்.எம்.பர்ஹான்)












