கிழக்கு மாகாண சபையின் அபிவிருத்தி பணிகளின் முன்னேற்ற அறிக்கை

கிழக்கு மாகாண சபையின் அபிவிருத்தி பணிகளின் முன்னேற்ற அறிக்கை தொடர்பான கூட்டம் நேற்று(19.12.2011) கிழக்கு மாகாண சபையின் கேட்போர்கூடத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் மாகாண திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் மாகாண திணைக்களங்களின் தலைவர்கள் என பலரும் கலந்து தமது திணைக்களங்களினால் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தி பணிகளின் முன்னேற்ற அறிக்கை தொடர்பாக பரிசீலனை செய்தமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது அபிவிருத்தி வேலைகளில் காணப்படுகின்ற குறைபாடுகள் மற்றும் தாமதங்கள் தொடர்பாகவும் முதலமைச்சரினால் சுட்டிக்காட்டப்பட்டது.
(எஃப்.எம்.பர்ஹான்)