மீண்டும் மர்ம ஊசி மனிதர்களின் நடமாட்டம் ! திருகோணமலை மக்களிடையே பெரும் பதற்றம்

images1திருகோணமலையில் மர்ம ஊசி மனிதர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளமையால் அப்பகுதி மக்களிடையே பெரும் பதற்றம் நிலவி வருகின்றது. கடந்த சில தினங்களாக பாடசாலை ஆசிரியர்கள், மாணவிகள் சிலர் மர்ம ஊசி மனிதர்களின் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிவிகப்ப டுகின்றது.

திருகோணமலை தில்லை நகரில் வசித்து வரும் முன்பள்ளி ஆசிரியையொருவர் நேற்று காலை 10 மணியளவில் பாடசாலை சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்மமனிதரொருவர் ஆசிரியையின் பின்புறத்தில் குத்தி விட்டு தப்பிச்சென்றுள்ளார்.

குறித்த ஆசிரியை தனது வீட்டிலிருந்த வீதியான, உட்துறைமுக வதீயில் நடந்துச் சென்றுக்கொண்டிருந்தபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கறுப்புநிற மோட்டார் சைக்கிளில் வந்த நீலநிறமான பெனியன் அணிந்திருந்த நபரொருவரே இவ்வாறு ஊசியால் குத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளதாகத் தெரிய வருகின்றது.

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஆசிரியர் பெற்றோர் உதவியுடன் திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேற்படி ஆசிரியரின் பின்பகுதியிலிருந்து வளைந்த நிலையில் ஊசியொன்றையும் எடுத்துள்ளனர். கடந்த மூன்று தினங்களாக இச்சம்பவம் இடம்பெற்று வருவதாகத் தெரிய வருகின்றது.

இச்சம்பவத்தினால் இப்பகுதி மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். ___
--