வருடா வருடம் டிசம்பர் 25ம் திகதி அனுஷ்டிக்கப்பட்டு வரும் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு அதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அதே வேளை மட்டக்களப்பு மாவட்டத்திலும் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்கமைய வீதிகள்'வங்கிகள்'வர்த்தக நிலையங்கள்'பொது மக்கள் பயன்படுத்தும் இடங்கள் என்பவற்றில் நத்தார் பாப்பாக்களை தொங்கவிடல்'கிறிஸ்தவ தேவாலயங்களில் விஷேட வழிபாடுகள்'ஆராதனை நடவடிக்கைகள் இடம்பெறல்' கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு வர்த்தக நிலையங்களில் விஷேட கழிவுகள் வழங்கள் போன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதி நாவற்குடாவில் நாவற்குடா சின்ன லூர்த்து அன்னை ஆலயத்தினால் காட்சிப்படுத்தப்பட்டுள்ள நத்தார் பாப்பாவை படங்களில் காணலாம்.
(எஃப்.எம்.பர்ஹான்)












