கிழக்கில் பெய்து வரும் அடை மழையினால் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள குளங்களின் வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் எஸ்.இன்பராஜா தெரிவித்தார்.
மட்டக்களப்பு உன்னிச்சைக் குளத்தின் மூன்று வான்கதவுகள் திறக்கப்பட்டு நான்கு அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளதுடன் உறுகாமம் குளத்தின் இரண்டு வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன.
அதே போன்று வாகனேரி குளம் மற்றும் வடமுனைக்குளம், வெலிக்கா கண்டி குளம் என்பவற்றின் வான் கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள குளங்களின் நீர்மட்ட நிலை குறித்து நிர்ப்பாசன அதிகாரிகளினால் அவதானிக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.--