மட்டக்களப்பு தொடர் மழையால் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்த வண்ணம் உள்ளது. இதனால் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதுடன், வடிகால் அமைப்பு இல்லாத வீதிகளிலும் வெள்ளநீர் நிரம்பிக் காணப்படுகின்றது. குளங்கள், ஆறுகளின் நீர் மட்டங்கள் உயர்ந்துள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் சராசரி வருடாந்த மழைவீழ்ச்சி 1,600 மில்லிமீற்றராக உள்ள நிலையில் இன்று மதியம் 12 மணி வரையிலான இவ்வருடத்தில் 3,250 மில்லிமீற்றர் மழை பெய்துள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலையம் தெரிவிக்கின்றது.--