
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்டு வரும் ஜெய்க்கா வேலைத்திட்டத்தின் கீழ் கோரளைப்பற்று மேற்கு பிரதேச செயலக பிரிவில் 37.1 மில்லியன் ரூபா செலவில் ஐந்து வீதிகளுக்கான வேலைகள்' பெயர்ப்பலகை அங்குரார்ப்பண நிகழ்வுகள் என்பன நேற்று (2011-12-18) ஞாயிற்றுக்கிழமை கோரளைப்பற்று மேற்கு பிரதேச சபை தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட்; தலைமையில் இடம்பெற்றன.
இதற்கமைய ஓட்டமாவடி எஸ்.எம்.ரீ.ஹாஜியார் வீதி 9.6 மில்லியன் ரூபா செலவிலும் ஓட்டமாவடி மடுவத்து வீதி 7 மில்லியன் ரூபா செலவில் மீராவோடை நூரானியா வீதி 8 மில்லியன் ரூபா செலவிலும் மீராவோடை எம்.பி.சி.எஸ். கிளை வீதி 6.3 மில்லியன் ரூபா செலவிலும் மீராவோடை சாவன்னா வீதி 6.2 மில்லியன் ரூபா செலவிலும் கொங்ரீட் வீதிகளாக புனர்நிர்மாணம் செய்யப்படவுள்ளன.
இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக கிழக்கு மாகாண சுகாதாரஇசமூக சேவைகள் அமைச்சர் எம்.எஸ்.எம்.சுபைர்இ கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி நீர் வழங்கள் அமைச்சர் எஸ்.உதுமாலெப்பைஇதேசிய கைத்தொழில் அதிகார சபையின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலிஇ கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான எம்.எல்.துல்ஷான்;. எம்.எல்.ஏ.அமீர் மற்றும் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
(எஃப்.எம்.பர்ஹான்)
















