
கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்டு வரும் ஜெய்க்கா வேலைத்திட்டத்தின் கீழ் அதன் 1.0மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள மீராகேணி மாகாத் ஒவிசர் வீதியின் மின்சாரத் திட்டம் நேற்று (2011-12-19)வைபவ ரீதியாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி மற்றும் கிராமிய மினசாரம் நீர் வழங்கள் அமைச்சர் எஸ்.உதுமாலெப்பையினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
சுமார் 10இலட்சம் ரூபா செலவில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்ட மின்சாரத்திட்ட நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதாரஇசமூக சேவைகள் அமைச்சர் எம்.எஸ்.எம்.சுபைர் கலந்து கொண்டதுடன் விசேட அதிதிகளாக ஏறாவூர் நகரசபை செயலாளர் ஹனீபா'ஏறாவூர்ப்பற்று பிரதேச சபைத் தவிசாளர் வினோத்'மாகாண அமைச்சர் உதுமாலெப்பையின் ஏறாவூர் அமைப்பாளர் நபீர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த வைபவம் மழைக்கு மத்தியில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
(எஃப்.எம்.பர்ஹான்)














