ஏறாவூரில் வீதி அபிவிருத்திப் பணிகள் ஆரம்பம்



ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்டு வரும் ஜெய்க்கா வேலைத்திட்டத்தின் கீழ் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் 200மில்லியன் ரூபா செலவில் பல வீதிகள் புனரநிர்மாணம் செய்யப்பட்டு வருகின்றன.
இதற்கமைவாக நேற்று (2011-12-19)ஏறாவூர் ஆலையடி வீதி'ஆஸ்பத்திரி வீதி'புன்னக்குடா வீதி'விச்சி நகர் ஆர்.டீ.எஸ்.வீதி'மீராகேணி மாகாத் ஒவிசர் வீதி என்பவற்றிற்கான நிர்மாண வேலைகள்' பெயர்ப்பலகை அங்குரார்ப்பண நிகழ்வுகள் என்பன இடம்பெற்றன.
இந்நிகழ்வில் இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக கிழக்கு மாகாண சுகாதாரஇசமூக சேவைகள் அமைச்சர் எம்.எஸ்.எம்.சுபைர்இ கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி நீர் வழங்கள் அமைச்சர் எஸ்.உதுமாலெப்பை விஷேட அதிதிகளாக ஏறாவூர் நகரசபை செயலாளர் ஹனீபா'ஏறாவூர்ப்பற்று பிரதேச சபைத் தவிசாளர் வினோத்'மாகாண அமைச்சர் உதுமாலெப்பையின் ஏறாவூர் அமைப்பாளர் நபீர்'பொது மக்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
(எஃப்.எம்.பர்ஹான்)