அம்பாறை மாவட்டத்தில் காற்றுடன் கூடிய அடை மழை & கடல் கொந்தளிப்பு Photos

(யு.கே.காலித்தீன்)
அம்பாறை மாவட்டத்தில் காற்றுடன் கூடிய அடை மழை வியாழக்கிழமை இரவு முதல் தொடர்ச்சியாகப் பெய்து வந்த்தனால் பல கிராமங்கள்
வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அத்துடன், அம்பாறை மாவட்டத்தில் கடல் கொந்தளிப்புடனும் காணப்படுகின்றது.


அதே நேரம் கடலரிப்பின் காரணமாக ஒலுவில் துறைமுக லைட்ஹவுஸ் முகப்பு வரை கடல் நீர் கொந்தளிப்பதையும் அருகில் நிற்கின்ற
தென்னை மரங்கள் கடல் நீரினால் அடித்து செல்வதையும், மீனவர்களின் தோனிகள் வலைகள் மற்றும் வாடிகள் சேதத்திற்குல்லாகியும்
அவர்களது அன்றாட தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதோடு. உள்வீதிகளில் வெள்ளநீர் நிரம்பிக் காணப்படுவதால் மக்கள் போக்குவரத்து மேற்கொள்ள முடியாதவாறு சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.









--