மட்டக்களப்பு தேசிய கல்வியியல் கல்லூரியில் இவ்வாண்டுக்கென 150 ஆசிரிய மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.
உயர்கல்வி அமைச்சின் கீழ் உள்ள மட்டக்களப்பு தாழங்குடா தேசிய கல்விக் கல்லூரியின் 2012ஆம் ஆண்டுக்கான பயிற்சி நெறிக்கு ஆசிரிய மாணவர்களை உள்ளீர்க்கும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
கல்லூரி பீடாதிபதி எஸ்.பாக்கியராஜா தலைமையில் புதிய ஆசிரிய மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்வுகள் இடம்பெற்றன. கல்விக்கல்லூரி விரிவுரையாளர்கள், உயர் கல்வி அமைச்சு அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இணைத்துக்கொள்ளப்பட்ட மாணவர்கள் ஆறு பாடப்பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
--