கல்லடியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞனொருவர் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில்

(எஃப்.எம்.பர்ஹான்)

மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியில் கல்லடி மணிக்கூட்டுக்குப் கோபுரத்திற்கு முன்பாக இன்று(2012-01-01) பிற்பகல் சுமார் 3.45மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 25வயது இளைஞனொருவர் பலத்த காயத்திற்குள்ளாகி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கல்முனையிலிருந்து மட்டக்களப்பை நோக்கி வந்த தனியார் பஸ்வண்டியொன்று சைக்கிளில்(துவிச்சக்கர வண்டி)பயணித்த குறித்த இளைஞனுடன் மோதியதிலேயே இவ்விபத்துச்சம்பவம் ஏற்பட்டுள்ளது.
இவர் கல்லடியைச் சேர்ந்த சுகன்(வயது25)எனவும் மட்டக்களப்பு புதூர்ப் பகுதியில் திருமணம் முடித்துள்ளார் எனவும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
குறித்த நபர் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்படும் போது மயக்க நிலையில் இருந்ததாகவும் தற்போது அவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(எஃப்.எம்.பர்ஹான்)
--