கிருஸ்ணா & எஃப்.எம்.பர்ஹான்
வலுவிழந்த கிராமங்களை மீளக் கட்டியெழுப்புதல் எனும் விசேட செயற்றிட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்திலே ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மயிலம்பாவெளி கிராமும் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள நாவற்கேணி கிராமமும்; கிழக்கு மாகாண முதலமைச்சரினால் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இக்கிராமங்களின் அடிப்படைத் தேவைகள் அனைத்தும் நேரடியாக மக்கள் முன்னிலையில் இனங்காணப்பட்டு, அவர்களது ஒப்புதலோடு திட்டங்கள் முன்மொழியப்பட்டு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
2012ம் ஆண்டிற்கான முதலாவது அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கான ஆரம்ப அபிவிருத்தி கூட்டத்தினை மயிலம்பாவெளி கருணாலய ஒன்று கூடல் மண்டபத்திலும், நாவற்கேணிக்கான கூட்டம் நாவற்கேணி கிராம அபிவிருத்திச் சங்க கட்டிடத்திலும் இடம் பெற்றது.
கிராமங்களுக்கான அடிப்படையுடன் உடனடித் தேவைகள் என்பன ஆராயப்பட்டு நிறைவேற்றப்படும் முதலமைச்சர் தெரிவித்தார். கிராமிய வீதிகள், கல்வி அபிவிருத்தி, வாழ்வதார வசதிகள், ஏனைய உட்கட்டுமான வசதிகள் என்பன இத்திட்டத்தினுள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இந் நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான எ.சி.கிருஸ்ணாணந்தராஜா, பூ.பிரசாந்தன், பிரதேச சபைத் தவிசாளர் எஸ்.வினோத், பிரதேச செயலாளர்களான திருமதி தினேஸ் கௌரி, திருமதி கலாமதி பத்மராஜா, முதலமைச்சரின் செயலாளர் கலாநிதி எஸ்அமலநாதன், கிராமிய அபிவிருதி திணைக்களத்தின் பணிப்பாளர் அருந்தவராஜா. மற்றும் முதலமைச்சர் செயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளர் கௌரிதரன் உட்பட கிராம மக்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள,; பிரதேச சபை உறுப்பினர்கள், கிராம சேவை உத்தியோகஸ்த்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.