நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தினால் மூதூரில் இலவச அப்பியாசக்கொப்பிகள்

(எஃப்.எம்.பர்ஹான்)
காத்தான்குடி நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் பாடசாலை மாணவர்களுக்கு 8ஆயிரம் இலவச அப்பியாசக் கொப்பிகள் வழங்கும் திட்டத்தின்; கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்று வருகின்ற அதேவேளை மூதூர் பிரதேசத்தில் மாணவர்களுக்கு இலவச அப்பியாசக் கொப்பிகள் வழங்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை மூதூர் அந்நகர் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறாசபை உறுப்பினரும் காத்தான்குடி நகரசபை உறுப்பினருமான பொறியியலாளர் எம்.எம்.அப்துர் ரகுமான்' நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறாசபை உறுப்பினர் டாக்டர் றிபாஸ்(ஆடீடீளு) மற்றும் சூறாசபை உறுப்பினர்கள் உலமாக்கள் புத்திஜீவிகள் கிறிஸ்தவ பாதர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
(எஃப்.எம்.பர்ஹான்)