சுவாமி விவேகானந்தர் சிலை உடைப்புக்கு அரசியல் வாதிகளின் கண்டன அறிக்கைகள்

தொகுப்பு:எஃப்.எம்.பர்ஹான்
பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் கண்டனம்

ஆரையம்பதி பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட ஆரையம்பதி பிரதேசத்தின் பிரதான வீதியிலுள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு முன்பாக வைக்கப்பட்டிருந்த சுவாமி விவேகானந்தரின் உருவச்சிலை சேதப்படுத்தப்பட்டதையிட்டு தான் வன்மையாக கண்டிப்பதாக சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினறுமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
இதை யார் செய்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாது.செய்தவர்கள் சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட வேண்டும்.
இது தொடர்பாக பொலிஸாருக்கும் குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கும் உடனடி விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பணிப்புரை விடுத்துள்ளேன்.
விசாரணைக்கென விஷேட குமுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை சந்தேகத்தின் பேரில் குறித்த சிலைக்கு முன்னாலுள்ள ஆரையம்பதி பிரதான வீதியிலுள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் கடமை புரியும் காவலாளியை கைதுசெய்யப்பட்டுள்ளது.அவரிடம் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மிகவிரைவில் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

(எஃப்.எம்.பர்ஹான்)

மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியில் அமைக்கப்பட்டிருந்த சிலைகளில் ஆரையம்பதி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள ஆரையம்பதி எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு முன்பாக ஆரையம்பதி பிரதேச சபையினால் நிறுவப்பட்டிருந்த சுவாமி விவேகானந்தரின் உருவச்சிலை இன்று அதிகாலை இனந்தெரியாதோரினால் சேதப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளதை தான் வன்மையாக கண்டிப்பதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் தமிழ் மக்கள் புலிகள் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினருமான பூ.பிரசாந்தன்; தெரிவித்தார்.

இது தமிழ்-முஸ்லிம் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் சதி முயற்சியாகும் .இதை யார் செய்திருந்தாலும் சட்டத்திற்கு முன் நிறுத்த வேண்டும் . சுவாமி விவேகானந்தர் விடுத்த போதனைகள் அனைத்து சமூகங்களுக்கும் தான் .தமிழ் சமூகத்திற்கு மாத்திரமல்ல .

இதை செய்தவர்கள் கண்டிப்பாக கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.

ஆரையம்பதி பிரதேச எல்லைக்குள் கடந்த சில தினங்களுக்கு முன்பாக அமைக்கப்பட்ட சிலைகளில் சுவாமி விவேகானந்தரின் சிலையும் ஒன்றாகும்.

குறுகிய நாட்களுக்குள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்ற இந்த சதி முயற்சி கிழக்கு மாகாணத்தில் தற்போது நிலவுகின்ற இன ஒற்றுமையை சீர்குலைப்பதாகவே அமைகின்றது.

இவ்வாறு தனது வன்மையான கண்டனத்தை தெரிவித்தார் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன்.






(எஃப்.எம்.பர்ஹான்)

ஆரையம்பதிஎல்லைப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்தவிவேகானந்தர் சிலைசேதப்படுத்தப்பட்ட சம்பவத்தினை நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது

அடுத்தவர்களின் மதகலாசார உணர்வுகளை மதிக்கத் தெரியாத இனவாத மனோ நிலைகொண்டவர்களின் மிலேச்சத்தனமான செயற்பாடாகவே இது அமைந்துள்ளது என நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் நம்புகின்றது என அவ்வியக்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நமது பிரதேசத்தில் ஏற்பட்டுவருகின்ற சமாதான சகவாழ்வு நிலைமையினை மேலும் வலுப்படுத்தி ஸ்திரப்படுத்துவதென்பது ஒவ்வொருவரும் பிறமத உணர்வுகளையும் கலாசார விழுமியங்களையும் மதித்தும் அனுசரித்தும்நடப்பதிலேயே தங்கியிருக்கிறது.
இப்பிரதேசத்தில் நிலையான சமாதானமும் இனநல்லுறவும் ஏற்பட்டு வருவதனை விரும்பாத தீயசக்திகள் இவ்வாறான தீயநடவடிக்கைகளை கடந்தகாலங்களிலும் அவ்வப்போதுமேற்கொண்டேவந்திருக்கின்றன.
மேலும், இன மதரீதியானஉணர்வுகளைதூண்டிவிட்டுதமிழ் முஸ்லிம் சமூகங்கள் மத்தியில் பிரிவினைகளைஉண்டுபண்ணிஅதன்மூலம் அரசியல் இலாபங்களைதேடமுனைகின்றஅற்பத்தனமானமுயற்சிகளின் முதற்கட்டமாகவும் இது இருக்க்ககூடும் எனவும் நல்லாட்சிக்கான மக்கள் இய்கம் கருதுகின்றது.
எனவே, இந்தமிலேச்சத்தனமானதீயநடவடிக்கையினை நல்லாட்சிக்கான மக்கள் வன்மையாகக் கண்டிப்பதோடு இவ்வாறான இனவாதநடவடிக்கைகள் மூலம் இலாபம் தேடமுனையும் தீயசக்திகள் தொடர்பில் நாம் அனைவரும் விழிப்புடன் செயற்படவேண்டும் எனவும்கேட்டுக் கொள்கிறது.
மேலும், இச்சம்பவம் தொடர்பில் இரு சமூகப் பிரதிநிதிகளும் அரசியல் வாதிகளும் பொதுமக்களும் பொறுமையுடனும் நிதானத்துடனும் நடவடிக்கைகளைமேற்கொள்ளவேண்டும் எனவும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் கேட்டுக் கொள்ளவிரும்புகின்றது.
அத்தோடு இப்பிரதேசத்தில் சுமூகநிலையினையும்,இன நல்லுறவினையும் நாம்அனைவரும் ஒன்றினைந்துமேலும் வலுப்படுத்துவதன்மூலமே இவ்வாறானதீயசக்திகளைநாம் வெற்றிகொள்ளமுடியும் எனவும் நல்லாட்சிக்கான மக்கள் தெரிவித்துக் கொள்கிறது என அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன் .செல்வராசா கண்டனம்
(எஃப்.எம்.பர்ஹான்)
ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஆரையம்பதி எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு முன்பாக ஆரையம்பதி பிரதேச சபையினால் நிறுவப்பட்டிருந்த சுவாமி விவேகானந்தரின் உருவச்சிலை இன்று அதிகாலை இனந்தெரியாதோரினால் சேதப்படுத்தப்படுத்தப்படமையானது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய விடயமாகும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன் .செல்வராசா தெரிவித்தார்.
குறித்த சிலை உடைக்கப்பட்ட விடயம் கேள்விப்பட்டு நான் உடனே ஸ்தலத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது சிலையின் கையும் முகம்'மூக்கு ஆகியன உடைக்கப்பட்டுள்ளதை அவதானித்தேன்.
அப்போது குறித்த விஷமிகள் சிலையை தள்ளிவிடவில்லை .அவர்கள் ஏதோ ஓன்றால் அடித்து உடைத்திருக்கிறார்கள் என்று விளங்கியது.
இவ்வாறான செயல்களை செய்த விஷமிகளை பொலிசாரும் இந்த அரசாங்கமும் விரைவில் அடையாளப்படுத்தி சட்டத்திற்கு முன் நிறுத்த வேண்டும்.
இவ்வாறான செயல் இந்த நாட்டில் நடக்கின்ற போது சமாதானம் எம்மைவிட்டு தூரத்தில் இருப்பதை உணர முடிகின்றது.
இப்படியான செயல்களை த.தே.கூ சார்பில் நான் வன்மையாக கண்டிக்கின்றேன்.
சுவாமி விவேகானந்தர் இலங்கை'இந்தியாவில் மாத்திரமல்ல சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற ஒரு ஞானி.அமெரிக்காவின் சிக்காக்கோ நகரிற்குச் சென்று உரையாற்றி வந்ததன் பின்னர் பல ஷிஸ்யர்களை அங்கு சம்பாதித்தவர் சுவாமி விவேகானந்தர்.
இந்த தீய செயல் இலங்கையை மட்டுமல்ல.சர்வதேச சுமூகத்தையே சிந்திக்க வைக்கும் ஒரு செயலாகும்.
குறித்த செயலைச் செய்த விஷமிகள் கண்டறியப்பட வேண்டும்.
சுர்வேதசப் புகழ்பெற்ற உத்தமர் சுவாமி விவேகானந்தரின் சிலை உடைக்கப்பட்டமை எல்லோராலும் கண்டிக்கப்பட வேண்டிய ஒரு செயலாகும்.
இவ்வாறான செயல்கள் தொடர்ந்தும் நடைபெறக்கூடாது.
நடைபெறாமல் இந்த அரசாங்கம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
ஆகவே குறித்த விஷமிகளை மிக விரைவில் பொலிஸாரும் அரசாங்கமும் கண்டுபிடித்து சட்டத்திற்கு முன் நிறுத்த வேண்டுமென தமழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா தெரிவித்தார்.


கிழக்கு மாண சபை உறுப்பினர் யூ.எல்.எம்.முபீனின் கண்டனம
(எஃப்.எம்.பர்ஹான்)
ஆரையம்பதி பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட ஆரையம்பதி எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த சுவாமி விவேகானந்தரின் உருவச்சிலை சேதப்படுத்தப்பட்டதையிட்டு தான் வன்மையாக கண்டிப்பதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதிஉயர் பீட உறுப்பினறுமான யூ.எல்.எம்.முபீன் தெரிவித்தார்.
குறித்த சிலையை உடைத்த விஷமிகள் கைது செய்யப்பட்டு சட்டத்திற்கு முன்னர் நிறுத்தப்பட வேண்டும்.
நீண்ட காலமாக யுத்த சூழ்நிலைக்குப் பின் சமாதானம் நிலவி வருகின்ற இக்காலகட்டத்தில் குறித்த சிலை உடைக்கப்பட்டமையானது சமாதானத்தை சீர்குலைத்து தமிழ்-முஸ்லிம் மக்களிடையே ஒரு இன முறுகலை ஏற்படுத்தும் செயற்பாடாகவே அமைந்துள்ளது.
முpக நீண்ட காலமாக காத்தான்குடி-ஆரையம்பதி ஆகிய பிரதேசங்களுக்கிடையே காணி மற்றும் எல்லை விவகாரம் நிலவி வந்தது.
இதைப் பயன்படுத்தி இரு சாராரினதும் இயல்பு வாழ்க்கையை சீர் குலைக்கும் வண்ணம் சிலை உடைக்கப்பட்டமை ஒரு தீய செயலாகும்.
இதை யார் செய்தார்கள் என்ற சந்தேகம் நிலவுகின்ற இந்நிலையில் ஒரு இனம் மற்றொறு இனத்தை ஒரு சமூகம் மற்றொறு சமூகத்தை விரல்நீட்டுவதைத் தவிர்த்து அதற்குப் பதிலாக இவ்வாறான தீய சக்திகளைக் கண்டுபிடித்து சட்டத்திற்கு முன் நிறுத்த அனைவரும் ஒன்று பட வேண்டும்.அப்போதுதான் இப்பிரச்சினைக்கு விடிவு காண முடிவதோடு தீய சக்திகளையும் தோற்கடிக்க முடியும்.
கடந்த 3தசாப்த காலங்களாக இரண்டு இனங்களுக்கு மத்தியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகள்'குழப்ப நிலைகளின் போது இரு சாரார்களினதும் சொத்துக்கள் சேதமாக்கப்பட்டதுடன் உயிரிழப்புக்களும் இடம்பெற்றது நாம் கற்றுக் கொண்ட பாடம்.
இவ்வாறு நாம் கற்றுக்கொண்ட பாடத்தின் மூலம் பெற்ற படிப்பினைக்கமைவாக நாம் அனைவரும் ஒன்றுபட்டு தீய சக்திகளை ஒழித்துக்கட்டி எமது பிரதேசத்தை மாவட்டத்தை மாகாணத்தை வளிமிக்கவையாக கட்டியெழுப்ப வேண்டும்.இது எமது தலையாய கடமையாகும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதிஉயர் பீட உறுப்பினறுமான யூ.எல்.எம்.முபீன் தெரிவித்தார்.