பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற ட்ரக்டர் கவிழ்ந்ததில் ஆறு மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

கிருஸ்ணா

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சத்துக்கொண்டானில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற ட்ரக்டர் கவிழ்ந்ததில் ஆறு மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

இன்ற வியாழக்கிழமை காலை சத்துறுக்கொண்டானில் உள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் இருந்து நாவலடி,நாமகள் வித்தியாலயத்துக்கு மாணவர்களை ஏற்றுச்சென்ற ட்ரக்டரே இவ்வாறு கவிழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ட்ரக்டர் பெட்டி கழன்றதால் இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவித்த பொலிஸார் காயமடைந்த மாணவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இது தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் மாணவர்களை ட்ரக்டரில் ஏற்றிச்சென்றது தொடர்பில் விசாரணை நடத்தப்படவேண்டும் என சிறுவர் நன்னடத்தை திணைக்களத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
--