மட்டக்களப்பில் நிலவும் கடும் குளிர் காலநிலை

மட்டக்களப்பில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் கடும் குளிர் காலநிலை காரணமாக மட்டக்களப்பு மக்கள் அனைவரும் பெரிதும்  இன்னல்களை அனுபவித்து வருகின்றனர் ..
காலை  ,மாலை வேளைகளில் பனியுடன் கூடிய நிலைகாணப்படுவது மட்டும் இல்லாமல் நாள் முழுவதும்  குளிர் காற்றுடன் கூடிய  குளிர்மையான காலநிலையும் மட்டு மண் எங்கும் நிலவுகிறது ,
இதன்  காரணமாக மட்டு மக்களிடையே காய்ச்சல்  , தடிமன் போன்ற நோய்கள் வேகமாக பரவி வருவது
குறிபிடத்தக்கவிடயமாகும்,இவ்வாறான காலநிலையால் மக்கள் தமது நாளாந்த கடமைகளை செய்வதில் பெரிதும் அசௌகரியங்களை சந்திக்க வேண்டி உள்ளது.
முக்கியமாக இக் குளிர் காலநிலையால் பாடசாலை மாணவர்கள் உட்பட குழந்தைகள் மற்றும் முதியோர் பாரிய சிக்கலான நிலைக்கு தள்ளபட்டுள்ளனர்...