நெல்சிப் திட்டத்தின் மீளாய்வுக் கூட்டம் இன்று (12.01.2012) வரோதய நகரில் அமைந்திருக்கும் கிழக்கு மாகாண முதலமைச்சர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலமையில் இடம்பெற்றது.
இக் கூட்டத்திற்கு கிழக்கு மாகாண பிரதம செயலாளர் வீ.ரி.பாலசிங்கம், கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளர் எஸ்.அமலநாதன், உலக வங்கியின் பிரதிநிதிகள், கிழக்கு மாகாணத்தின் செயலாளர்கள், பொறியியலாளர்கள், கிழக்கு மாகாணத்தில் உள்ள 3மாவட்டங்களினதும் மாநகரசபை, நகரசபை மேயர்கள், பிரதேசசபை தவிசாளர்கள், பிரதேசசபை செயலாளர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.
(எஃப்.எம்.பர்ஹான்)












