By-krishna,
மட்டக்களப்பு,களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அம்பியுலன்ஸ் வண்டியின் பின்புற கண்ணாடி வெள்ளிக்கிழமை இரவு இனந்தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டுள்ளது.
அம்பியுலன்ஸ் வண்டி தரிப்பிடத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வண்டியே இவ்வாறு உடைக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சர் கு.சுகுணன் தெரிவித்தார்.
இது தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
வைத்தியசாலை பல்வேறு வழிகளிலும் வளர்ச்சியடைந்து வரும் நிலையில் அதனை பொறுத்துக்கொள்ளமுடியாத நாசகார நடவடிக்கையே இதுவென வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சர் கு.சுகுணன் தெரிவித்தார்.
பொது மக்களுக்கு அளவற்றசேவையாற்றிவரும் இவ்வாறான வாகனங்கள் மீது தாக்குதல் நடத்துவோர் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
பல்வேறு கஸ்டங்களுக்கு மத்தியில் வைத்தியசாலை இயங்கிவரும் நிலையில் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு கடும் கண்டம் தெரிவிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

--