கிழக்கு முதல்வரின் தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தி.

(FM FARHAN)
தைத்திருநாளை கொண்டாடும் அனைத்து உள்ளங்களுக்கும் எனது இதயம் கனிந்த தைப்பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் பெருமிதம் அடைகின்றேன். உலகிலே உள்ள எல்லா சமூகத்திற்கும் குறித்த ஒவ்வொரு விசேட நாட்கள் இருக்கின்றன. அதனை அவர்கள் அனுஸ்டிப்பது மரபு. அந்த வகையில் தமிழருக்கே உரித்தான தைத்திருநாள் கொண்டாட்டமானது உண்மையிலே நன்றி உணர்வை பறைசாற்றுகின்ற ஓர் நிகழ்வாகும். அதாவது உழவர் பெருமக்கள் சேற்றில் கால் வைத்தால் நாம் சோற்றிலே கை வைக்க முடியும் எனும் உயரிய உண்மை தத்துவத்திற்கு அமைய விவசாயத்தை மேற்கொள்கின்றபோது அதற்கு துணைபுரிகின்ற முதற்காரணிகள் மற்றும் துணைக்காரணிகளுக்கு நன்றி செலுத்துகின்ற ஓர் உயரிய கொண்டாட்டத்திற்குரிய தினம்தான் இன்றைய தைத்திருநாள்.
மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் நன்றி உணர்வென்பது இன்றியமையாதது. அந்த உண்மைத்தன்மையினை புலப்படுத்துகின்ற இன் நன் நாளிலே மழை, சூரியன், கால்நடைகள் என்பவற்றிற்கு நன்றி செலுத்துவதோடு தமிழர்கள் தங்களது மரபின்படி புதிய ஓர் ஆண்டிற்கான முதல் நாளாகவும் இதனை ஏற்பர். தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற சொற்பதத்திற்கு அமைய புதிய பல நல்ல முயற்சிகளை இந்த மாதத்திலே பெரும்பாலானவர்கள் ஆரம்பிப்பார்கள். கடந்த பல ஆண்டுகளாக யுத்த இருள் சூழ்ந்;த எமது நாடு இன்று புத்துணர்வோடு புதுப்பொலிவுடன் ஒளி தருகின்ற இத்தருணத்திலே நன்றி உணர்வை ஏற்றவர்களாக எல்லோரிடமும் கருணைகாட்டி சாந்தியும் சமாதானமும் சுபீட்சமும் நிறைந்த ஓர் எதிர்காலத்தை நோக்கி பயணிக்க நாம் அனைவரும் இன் நன்நாளிலே திடசங்கர்ப்பம் பூணுவோமாக!
இந்த புதுமைமிகு இவ்வாண்டிலே இன்று இல்லங்களிலெல்லாம் தித்திக்கும் தைப்பொங்கல் விழாவை சிறப்பாகவும் தங்களது வசதிக்கு ஏற்றாப்போல் கொண்டாடுகின்ற ஒவ்வொருவருக்கும் மீண்டும் எனது இதய பூர்வமான தைப்பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன்.

சிவநேசதுரை சந்திரகாந்hதன்
முதலமைச்சர்
கிழக்கு மாகாணம்.
(FM FARHAN)