தம்பிரட்னம் சதீஸ்காந் மட்டக்களப்பை பிறப்பிடமாக கொண்ட ஒரு கவிஞர் - பாடலாசிரியர். மட்டக்களப்பு புனித மிக்கேல் தேசியப் பாடசாலை இல் தனது கல்வியை முடித்த இவர் முகாமைத்துவம் மற்றும் விவசாயத்துறையில் டிப்ளோமா கற்கையைப் பூர்த்தி செய்து தற்போது தனியார் நிறுவனத்தில் பணிபுரிகின்றார்.
பாடசாலைக் காலத்தில் இருந்தே கவிதை, பாடலாக்கம், நடனம், நடிப்பு, புகைப்படத்துறை, கட்டுரை ஆகிய கலைத்துறைகளில் சிறப்பாகத் திறமைகளை வெளிக்காட்டி வருகின்ற சதிஸ்காந் இதுவரை 3 தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார்
மெட்ரோ நியூஸ்,வீரகேசரி,ஆனந்தவிகடன்,குமுதம் ஆகியவற்றில் கவிதைகளை எழுதி வரும் இவர் விரைவில் "இன்று மாலை தென்றலுடன் கூடிய காதல் வரும்" என்ற கவிதைத் தொகுதியை வெளியிடவுள்ளார் .
இலங்கையின் முன்னணிப் பாடலாசிரியராகத் திகழ்பவர்களில் சதீஸ்காந்தும் ஒருவராக உள்ளார். தற்போது வெளிவரும் நம்நாட்டுப் பாடல்களில் அநேகமானவை இவர் எழுதியதே. இதுவரை 35 பாடல்களும் 10 நிலையக் குறியிசைகளையும் 3 விளம்பரப்பாடல்களையும் எழுதிய சதீஸ்காந் சூரியன் fm , வெற்றி fm ஆகிய வானொலிகளுக்கு அதிகமான நிலையக்குறியிசைகளை எழுதியுள்ளார்.
இவர் எழுதிய பூக்கின்றாய் பூவாய், மழைவிழி, காதோடு காதல் , ஓராயிரம் வெண்ணிலா, வானவில் தேவதை, துளி துளி , தாய்மடியே , ஐ லவ் யு, சோனியா, ஓர் சென்ட்ரலா ஆகிய பாடல்கள் சூப்பர் ஹிட் பாடல்களாக அமைந்ததோடு மக்களிடையே சிறந்த வரவேற்பையும் பெற்றது. இலங்கையின் தற்போதைய முன்னணி இசையமைப்பாளர்களான ஷமில், பிரஜீவ், கந்தப்பு ஜெயந்தன், சகிஸ்னா போன்றவர்களுக்கு பாடல்களை எழுதியுள் பெருமை உள்ள ஒருவர் என்பதும் இதில் குறிப்பிட வேண்டும்
கனடாவில் உள்ளம் திறேந்தேன்(ஷமில்) இலங்கையில் கனவின் கருவில்(ஷமில்), டெஸ்டினி(ப்ரணீவ்) மற்றும் யாழ்தேவி (கந்தப்பு ஜெயந்தன்) ஆகிய இசைத் தொகுப்புகளில் பாடல்கள் எழுதி உள்ள இவர் தற்போது ஒரு தென்னிந்தியத் திரைப்படத்திலும் பாடலாசிரியராக ஒப்பந்தமாகியுள்ளார்
விருதுகள்
2006 - சக்தி fm "கேட்டாலே பரவசம்" நடத்திய காதலர்தினக் கவிதைப் போட்டியில் முதலாம் இடம்!
2008 - "தெருவோரத்தெய்வம்" கவிதைக்காக அரச மாகாண விருது!
2008 - நடனம் மற்றும் கிராமிய இசைக்கான அரச தேசிய விருது!
2010 - இவர் எழுதிய "மழை விழி" பாடல் சூரியன் fm இல் டொப் 20 இல் முதல் இடத்தைப் பெற்று நம்நாட்டுப் பாடல்களில் ஒரு வரலாற்றுத் திருப்பத்தை ஏற்படுத்தியது!
2011 - சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது!
2011 - சக்தி தமிழ் இசை விருதில் இவர் எழுதிய 5 பாடல்கள் 8 இசை விருதுகளுக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது!
பாடசாலைக் காலத்தில் இருந்தே கவிதை, பாடலாக்கம், நடனம், நடிப்பு, புகைப்படத்துறை, கட்டுரை ஆகிய கலைத்துறைகளில் சிறப்பாகத் திறமைகளை வெளிக்காட்டி வருகின்ற சதிஸ்காந் இதுவரை 3 தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார்
மெட்ரோ நியூஸ்,வீரகேசரி,ஆனந்தவிகடன்,குமுதம் ஆகியவற்றில் கவிதைகளை எழுதி வரும் இவர் விரைவில் "இன்று மாலை தென்றலுடன் கூடிய காதல் வரும்" என்ற கவிதைத் தொகுதியை வெளியிடவுள்ளார் .
இலங்கையின் முன்னணிப் பாடலாசிரியராகத் திகழ்பவர்களில் சதீஸ்காந்தும் ஒருவராக உள்ளார். தற்போது வெளிவரும் நம்நாட்டுப் பாடல்களில் அநேகமானவை இவர் எழுதியதே. இதுவரை 35 பாடல்களும் 10 நிலையக் குறியிசைகளையும் 3 விளம்பரப்பாடல்களையும் எழுதிய சதீஸ்காந் சூரியன் fm , வெற்றி fm ஆகிய வானொலிகளுக்கு அதிகமான நிலையக்குறியிசைகளை எழுதியுள்ளார்.
இவர் எழுதிய பூக்கின்றாய் பூவாய், மழைவிழி, காதோடு காதல் , ஓராயிரம் வெண்ணிலா, வானவில் தேவதை, துளி துளி , தாய்மடியே , ஐ லவ் யு, சோனியா, ஓர் சென்ட்ரலா ஆகிய பாடல்கள் சூப்பர் ஹிட் பாடல்களாக அமைந்ததோடு மக்களிடையே சிறந்த வரவேற்பையும் பெற்றது. இலங்கையின் தற்போதைய முன்னணி இசையமைப்பாளர்களான ஷமில், பிரஜீவ், கந்தப்பு ஜெயந்தன், சகிஸ்னா போன்றவர்களுக்கு பாடல்களை எழுதியுள் பெருமை உள்ள ஒருவர் என்பதும் இதில் குறிப்பிட வேண்டும் கனடாவில் உள்ளம் திறேந்தேன்(ஷமில்) இலங்கையில் கனவின் கருவில்(ஷமில்), டெஸ்டினி(ப்ரணீவ்) மற்றும் யாழ்தேவி (கந்தப்பு ஜெயந்தன்) ஆகிய இசைத் தொகுப்புகளில் பாடல்கள் எழுதி உள்ள இவர் தற்போது ஒரு தென்னிந்தியத் திரைப்படத்திலும் பாடலாசிரியராக ஒப்பந்தமாகியுள்ளார்

--